இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். …
Read More »ஜெனீவாவில் நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் உறுதியான, காலக்கெடுவுடன் கூடிய விளைவுகளை இந்தியா கோரியது
ஜெனீவாவில் ஜூன் 04, 2025 அன்று நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா உரையாற்றினார். இந்த முக்கியமான விவாதத்தை நடத்துவதற்காக ஏற்பாட்டாளர்களை அவர் பாராட்டினார். ஜி20 தலைமைத்துவங்கள் மூலம் உலகளாவிய உரையாடலைத் தொடர்வதில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புகளையும் இந்தியா அங்கீகரித்தது. பேரிடர் அபாயக் குறைப்பு (டி.ஆர்.ஆர்) நிதியுதவி என்பது ஒரு புறப் பிரச்சினை …
Read More »இந்திய இளைஞர்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். நாட்டின் இளையோர் சக்தி சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதி கொண்டதாகும்: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்திய இளைஞர்கள் படைத்துள்ள சர்வதேச சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உலக அளவில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவை சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதியின் சின்னங்களாக உள்ளன என்று விவரித்த பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது நாட்டின் இளையோர் சக்தியின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் நம்பிக்கையால் தூண்டப்பட்டுள்ளது என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் …
Read More »இந்தியாவின் வளர்ந்து வரும் அந்நிய நேரடி முதலீடு குறித்த முதலீட்டாளர்களின் வட்டமேசை கருத்தரங்கம்
2025 ஜூன் 5-ம் தேதி புதுதில்லியில் உள்ள வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்டமேசை கருத்தரங்கில் முதலீட்டாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு இந்தியாவின் வளர்ந்து வரும் முதலீட்டுக்கு உகந்த சூழல் அமைப்பு, எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், வருவாய் மறு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான உத்திகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த நிகழ்வில் முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 90-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட …
Read More »பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்
இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். 2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஆக்கப்பூர்வமான …
Read More »இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்
இந்திய மொழிகள் பிரிவை (பாரதிய பாஷா அனுபாக்) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சக செயலாளர், ஆட்சி மொழிப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்திய மொழிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆட்சி மொழித்துறை முழுமை அடைந்திருப்பதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். வெளிநாட்டு மொழிகளின் செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிக்கும் …
Read More »உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது
2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், புதுதில்லியில் சாகேத்தில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் ‘தாயின்பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்’ என்ற சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர சேகர் …
Read More »பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியுள்ளது
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணையவழியாக நடைபெற்ற நிகழ்வில் வழங்கியது. ரூ.884 கோடி கடன் அனுமதிக்காக இந்த மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்த ஆணையத்தின் மத்திய அலுவலகத்தில் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் மானியத் தொகையை பயனாளிகளுக்கு விடுவித்தார். ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி …
Read More »வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …
Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற திரு உமாசங்கர் பாண்டே பாதுகாப்புத் துறையின் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்டார்
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு உமாசங்கர் பாண்டே 2025 ஜூன் 05 அன்று புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத் துறையின் நிலச் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா மரம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதில் பாதுகாப்பு நிலச் சொத்து நிர்வாக அமைப்பில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அவர்களது குழந்தைகள் துறை சார்ந்த பிற பணியாளர்கள் உள்ளிட்ட …
Read More »
Matribhumi Samachar Tamil