Friday, December 05 2025 | 07:51:45 PM
Breaking News

Matribhumi Samachar

15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் மத்திய சுகாதார, குடும்ப நல இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்புரை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல  இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்,  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருந்தியல் ஆணையம் ஏற்பாடு  செய்துள்ள 15-வது சர்வதேச உலக மருந்தியல் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் சர்வதேச அளவில் மருந்தியல் துறை தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மருந்துப் பொருட்களின் தரநிலைகள் மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திருமதி படேல், சர்வதேச தரத்தில் …

Read More »

நொய்டாவில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தில் சிப் வடிவமைப்பிற்கான சிறப்பு மையத்தை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் திறந்துவைத்தார்

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன்  நொய்டா வளாகத்தில் உள்ள தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வடிவமைப்பு சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சாக்டீம்அப் செமிகண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, இந்தியாவின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. மத்திய அரசின் …

Read More »

கார்வார் கடற்படை தளத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை முப்படை தலைமைத் தளபதி தொடங்கி வைத்தார்

முப்படைகளின் தலைமைத் தளபதியும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளருமான ஜெனரல் அனில் சவுகான், இந்திய கடற்படையின் மூத்த மாலுமிகளுக்கான குடியிருப்புகளையும், கார்வாரில் உள்ள கடற்படைத் தளத்தில் டிரங்க் வசதிகளின் ஒரு அங்கமாக பிரதான விநியோக துணை நிலையத்தையும் 2025 பிப்ரவரி 04-ம் தேதி  தொடங்கி வைத்தார். கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராணுவ அதிகாரிகளுக்கான 240 குடியிருப்பு அலகுகளைக் …

Read More »

அல்ஜீரியா ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சைத் சானெக்ரிஹா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்

அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு …

Read More »

கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும் இந்திய கார்பன் சந்தைகள் குறித்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இந்த மைல்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு நிதின் …

Read More »

நாட்டின் எரிசக்தி ஆதாரங்களில் அணு எரிசக்தி திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க உதவும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

2025-26-ம்  நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “அணுசக்தி இயக்கம்” நாட்டின் எரிசக்தி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அணுமின் உற்பத்தி  இந்தியாவின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக மாற உதவும்  என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுமின் உற்பத்தியின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டினர். எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு அணுமின் …

Read More »

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது. …

Read More »

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் …

Read More »

ஹெச்டிபிடி விதைகள்

உரிய கொள்கை நடவடிக்கைகள், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, கிராம அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம்  வேளாண் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், நமோ கிசான் திட்டம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்கின்றன. மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. 2013-14ம் ஆண்டில் ரூ. 21933.50 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு  2024-25 ஆம் ஆண்டில் 1,22,528.77 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஆதரவின் கீழ் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பானது அதன் நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் மேம்பட்ட தரத்துடன் பல்வேறு தன்மை கொண்ட புதிய கலப்பின பயிர் ரகங்களை உருவாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2024) 92 வகையான சோயாபீன்ஸ், 239 வகையான மக்காச்சோளம், 331 வகையான பருத்திபீட்டா பருத்தி ஆகியவை வெளியிடப்பட்டு வணிக சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வகைகளின் உயர் விளைச்சல் வகைகள், அவற்றின் மேலாண்மை தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் போன்றவை நாட்டின் விவசாயிகளுக்கு தவறாமல் பரிந்துரைக்கப்படுகின்றன. பருத்தி, மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவற்றில் தற்போதுள்ள இயந்திர மற்றும் இரசாயன களைக் கட்டுப்பாட்டு உத்திகளுடன் பல்வேறு களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண் விவசாய மையங்கள், மாநில விவசாயத் துறைகள் மூலம் பெரும் அளவில் விவசாயிகளிடையே பரப்பப்பட்டுள்ளன. மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் வேளாண் துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி இந்தத் தகவலை தெரிவித்தார்.

Read More »

வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்

விவசாயிகளின் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் விவசாயத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு பல முக்கிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்பது பயிர் கண்காணிப்பு, மண் மேலாண்மை மற்றும் வானிலை முன்னறிவிப்புக்காக செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2900 வகைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் 2661 வகைகள் …

Read More »