Wednesday, February 04 2026 | 07:38:02 PM
Breaking News

Business

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு

2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து  2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக  மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது: 1)    பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக்,  குழுத் தலைவர் 2)    கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர் 3)    …

Read More »

டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை

நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. 2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது …

Read More »

எட்டு முக்கிய தொழில் பிரிவுகளில் நிலக்கரித் துறை நவம்பர் 2024-ல் 7.5% வளர்ச்சியை அடைந்தது

வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்)  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு …

Read More »

சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்

சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.)  பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார். “ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி …

Read More »

ஜவுளி அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

முதல் தரத்திலான இந்திய பருத்திக்கு தனித்துவ  அடையாளத்தை வழங்குவதற்காக கஸ்தூரி காட்டன் இந்தியாவின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜவுளி, ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 10 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் …

Read More »

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம்: 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 6.30 கோடிக்கும் அதிகமான நிறுவனங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு  உதவிடும் ஆற்றல் வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோரை ஊக்குவித்து, குறைந்த மூலதன செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக. மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து, கதர், கிராமம், கயிறுத் தொழில்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த …

Read More »

2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயல்பாடுகள்

பணப் பரிமாற்ற ஒப்பந்தம் – சார்க் நாடுகளுக்கான புதிய கட்டமைப்பு: 2024-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளாவிய பரிவர்த்தனை  நடவடிக்கைகளுக்கான  செயல்பாடுகளை மேற்கொண்டது. சார்க்  அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையில் புதிய  பணப்பரிமாற்ற  வசதிக்கான   கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பில் 25,000 கோடி  ரூபாய் மதிப்பிலான  இந்திய ரூபாயின்  சில்லரை பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அமெரிக்க டாலர் / யூரோ  பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்புடன் இணைந்து செயல்படும். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ரூபாயின் உலகளாவிய பரிமாற்றத்தை ஊக்குவிக்கும். இந்தியா- உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளுக்கிடையிலான நிதி சார் ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களின்  நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையிலும், பொருாளதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா- உஸ்பெகிஸ்தான்  நாடுகளிடையே நிதி சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, நிதி சார் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியா-குவைத்  நாடுகளிடையே முதலீட்டு பணிக்குழு உருவாக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய முதலீட்டாளர் நல நிறுவனம், மாநிலங்களுக்கிடையே நிதி சார் ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது.  மேலும், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான  விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம்  அதன் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு, தடையற்ற பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது. சார்க்  அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான புதிய பண பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் 2024-27 இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத்  நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் நிலையான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளில் முன்னேற்றம் 2024-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் சர்வதேச அளவிலான  பொருளாதார வளர்ச்சியில் புதுமையான முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன. சார்க் அமைப்பின்  உறுப்பு நாடுகளுடன் பொருளாதார  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், பிற நாடுகளுடன்  இணைந்து செயல்படுவதற்கான  நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது.

Read More »

பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான கூட்டம் நிதிச்சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு தலைமையில் நடைபெற்றது

நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களால் தீர்வு காணப்பட்ட 20 பொதுமக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து புகார் அளித்தவர்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒழுங்குமுறை  அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவுகளை நிதிச்சேவைகள் …

Read More »

தொழில்துறையின் நிலைத்தன்மை, மேம்பாட்டில் புகையிலை வாரியம் கவனம் செலுத்துகிறது; 2023-24-ம் நிதியாண்டில் ஏற்றுமதி 12,005 கோடி ரூபாயை எட்டியது

புகையிலை  சார்ந்த கைத்தொழிலின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையிலான உத்திசார் நடவடிக்கைகளை புகையிலை வாரியம் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டுத்  தேவைகளையும் ஏற்றுமதி தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் வகையில், பயிர் செய்வதை திட்டமிடுதல், உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும். இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான புகையிலையை வழங்க ஏதுவாக அதனை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு இந்த வாரியம் உதவி செய்கிறது. புகையிலை சார்ந்த  கைத்தொழிலின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக “புகையிலை …

Read More »

மூடுபனியை எதிர்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தியது

மூடுபனி காலத்திற்கான தயார்நிலையை உறுதி செய்வதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. மூடுபனி தொடர்பான சவால்களை சுமூகமாக எதிர்கொள்ள பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே தடையற்ற ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சகம் எடுத்துரைத்தது. …

Read More »