நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எளிதான அணுகுமுறை, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன. 2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.
Read More »இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது – திரு தர்மேந்திர பிரதான்
கடந்த பத்தாண்டுகளில், இந்த அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முதல் பெண் சக்திக்கு அதிகாரமளித்தல்,இந்திய மொழிகளை ஊக்குவித்தல் என்பதுவரை, ஒவ்வொரு முயற்சியும் தரம், சமத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டால் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள …
Read More »மங்களகிரியில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 17, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் முதல் பேட்ச் மாணவர்கள்தான் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை உருவாக்குகின்றனர்என்று கூறினார். முதல் பேட்ச் எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளிடம் பேசிய அவர், சமூகம், நாடு மற்றும் வெளிநாடுகளில் எய்ம்ஸ் மங்களகிரியின் முதல் …
Read More »இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பணிகளும் அதற்கான நிதி ஒதுக்கீடும்
இந்திரா காந்தி தேசிய கலை மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இந்திய கலை, கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பணிகளை இந்த மையம் மேற்கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 2019-20: 46.40 கோடி 2020-21: 40.00 கோடி 2021-22: 53.30 கோடி 2022-23: 55.05 கோடி 2023-24: 109.10 கோடி விடுவிக்கப்பட்ட இந்த தொகை, கலாச்சார தகவல் ஆய்வகம், ஊடக …
Read More »எதிர்கால உலகை இந்தியாவின் அறிவுத்திறன் வழிநடத்தவுள்ளது : ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின் (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப …
Read More »குவாலியரில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விக்டோரியா மார்க்கெட் கட்டிடத்தில் அதிநவீன இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (ஜிஎஸ்ஐ) புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று ரிப்பன் வெட்டி கல்வெட்டைத் திறந்து வைத்தார். பாரம்பரியத்தின் பிரம்மாண்டத்தை நவீன கண்டுபிடிப்புகளின் அற்புதங்களுடன் தடையின்றி கலக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தை இந்த நிகழ்வு குறித்தது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். குவாலியர் புவி அறிவியல் அருங்காட்சியகம் பூமியின் கதையின் அதிசயங்களுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது – அறிவியலும் கலையும் ஆர்வத்தைத் தூண்டும் அறிவின் சரணாலயம். இது இரண்டு காட்சியகங்களைக் கொண்டுள்ளது. இது நமது கிரகத்தின் மர்மங்கள் மற்றும் காலப்போக்கில் வாழ்க்கையின் பயணத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
Read More »விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு 14 டிசம்பர் 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக (ஆர்ஓ) இருந்தார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு , அவர் பட்டங்களை வழங்கினார். 178 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 204 வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், …
Read More »திருச்சி என்ஐடியில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (எஸ்இசி-2024) ஏற்பாடு செய்துள்ளது. கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருட்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும். மேலும் நெகிழ்தன்மையுடன் கூடிய, நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள், தொழில்துறை …
Read More »நாடாளுமன்ற கேள்வி: பார்வையற்ற சிறுவர், சிறுமியரின் கல்வி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலின் 9வது அட்டவணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம் என்பது மாநில அரசின் பொறுப்பாகும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ மத்திய அரசு இயற்றியது. இது 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 16 & 17-ன் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியும், பிரிவு 31-ன் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு …
Read More »புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்
புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள திரு மோடி கூறியிருப்பதாவது: “இளம் குழந்தைகளுக்கு ஆழ்ந்த கற்றல், படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சார வேர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு அவர்களின் தாய்மொழியில் …
Read More »