உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள பட்டியலை அதிகரிப்பது என்பது தொடர் செயல்முறையாகும். உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியா 43 கலைச்சின்னங்களைக் (35 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு) கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் செயல்பாட்டு வழிகாட்டுதல் நடைமுறைகள் 2023-ன் படி, ஆண்டு தோறும் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க கலாச்சார, இயற்கை அல்லது இரண்டும் கலந்த சொத்துக்கள் மட்டுமே முன்மொழியப்படலாம். 2024-25-ம் ஆண்டிற்கான கல்வெட்டு செயல்முறைக்காக ‘இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பு’ …
Read More »இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சமநிலையான, லட்சியமான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன: பியூஷ் கோயல்
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, இத்தாலி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய ஆணைய தூதுக்குழுவினருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா, வர்த்தகத் துறை செயலாளர், டிபிஐஐடி செயலாளர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் …
Read More »சாகர் பரிகிரமா பயணத் திட்டம்
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை சார்பில், 75-வது இந்திய விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி நாட்டின் கடலோரப் பகுதிகளை படிப்படியாக மேம்படுத்துவதற்கு ‘சாகர் பரிக்கிரமா’ என்ற விரிவான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மாண்ட்வியில் தொடங்கிய இத்திட்டம் 12 கட்டங்களாக 80 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 113 பகுதிகளில் 12 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. 12 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7,440 கி.மீ …
Read More »வளர்ச்சியைடந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகள்
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை அடைய கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி புதிய மெகா துறைமுகங்களை நிறுவுதல் மற்றும் பெரிய கப்பல்களைக் கையாளும் வகையில் ஆழமான துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்குதல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான …
Read More »மாஸ்கோவில் ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வில் இந்திய, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக தலைமை தாங்கினார்கள்
ராணுவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 21-வது அமர்வு 2024 டிசம்பர் 10 அன்று மாஸ்கோவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ் ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்றது. இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் வலுவானது என்றும், சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற ராஜீய கூட்டாண்மையின் பொறுப்புகளை நிறைவேற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். …
Read More »சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, பொது மக்கள் மற்றும் …
Read More »ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா
ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா. ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. அரசு அமைப்புகள் அல்லது மருத்துவமனை & சுகாதார சேவை வழங்குபவர்களுக்கான தேசிய அங்கீகரிப்பு வாரியம் அல்லது ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள மருத்துவமனை/நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருகை புரிபவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது. 04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா தளத்தைப் பார்வையிடலாம்www.healinindia.gov.in. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Read More »இலங்கையின் குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 6 வது திறன் மேம்பாட்டு பயிற்சி முசோரியில் உள்ள சிறந்த ஆளுகைக்கான தேசிய பயிற்சி மையத்தில் தொடங்கியது
சிறந்த ஆளுகைக்கான தேசிய மையத்தில் இலங்கையின் இடைநிலை குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 6-வது திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கட்கிழமை தொடங்கியது. 2024 டிசம்பர் 9-ம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் இலங்கையைச் சேர்ந்த 40 இடைநிலை அரசு அதிகாரிகள், செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பொது நிர்வாக அமைப்பு, விவசாயம், கால்நடை, சுகாதார அமைச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்று உள்ளனர். சிறந்த ஆளுகைக்கான தேசிய மையத்தின் தலைமை …
Read More »பாதுகாப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தலைமை இயக்குநர் கிரீஸ் பயணம்
பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா 2024 டிசம்பர் 10-11 முதல் கிரீஸ் நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ராணுவத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஸ்டோஸ் சசியாகோஸ் உள்ளிட்ட கிரீஸ் நாட்டின் மூத்த ராணுவத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார். முக்கியமான பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த விவகாரங்களில் நிபுணர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக சர்வதேச உறவுகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் பங்கேற்பார். …
Read More »ரஷ்யாவில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துஷில் சேர்க்கப்பட்டது
ஐஎன்எஸ் துஷில் (F 70), அதிநவீன பல்நோக்கு ஏவுகணை போர்க்கப்பல், 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், இந்த கமிஷன் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் வலிமைக்கு பெருமை சேர்க்கும் சான்று என்றும், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்புறவில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் விவரித்தார். தற்சார்பு இந்தியா என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ரஷ்யாவின் …
Read More »