Thursday, July 23 2026 | 10:18:09 PM
Breaking News

International

இந்தியாவிலிருந்து 153 நாடுகள் பொம்மைகளை இறக்குமதி செய்கின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

ஒரு காலத்தில் இறக்குமதியையே பெரிதும் நம்பியிருந்த இந்தியாவின் பொம்மைத் தொழில், தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்து 153 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இன்று புதுதில்லியில் நடைபெற்ற 16வது பொம்மை வர்த்தக சர்வதேச பி2பி கண்காட்சி 2025-இல் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தக் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார். நிலையான கொள்கை ஆதரவு, தரங்களை அமல்படுத்துதல் மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொகுப்புகளை வலுப்படுத்துதல் மூலம் இந்த மாற்றம் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்

கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர்  திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் …

Read More »

கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

அதிபர் திரு ஜான் மஹாமா அவர்களே, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! 30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த பெருமை. கானாவில் எங்களுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ள  நபராக இருக்கிறேன். அதிபரே என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மரியாதைக்குரிய விஷயமாகும். 2024 டிசம்பர்  …

Read More »

பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப்  பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும். இரு தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு உறவை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான காலத்தால் மாறாத …

Read More »

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இன்று  (02.07.2025) முதல்  09.07.2025 வரை நான் பயணம் மேற்கொள்கிறேன். அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன்.  கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக்  கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை …

Read More »

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம்

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர்,  இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் …

Read More »

பதான்கோட்டிலிருந்து கத்தாருக்கு ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் ஏற்றுமதி

நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

Read More »

ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் குற்றமே, நியாயப்படுத்த முடியாதது; கூட்டு பாதுகாப்புக்காக தீவிரவாத அச்சுறுத்தலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்

சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்  கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …

Read More »

ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் …

Read More »

இந்திய கடற்படையானது தமல் கப்பலை பணியில் இணைக்க உள்ளது

இந்திய கடற்படை, அதன் சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, 2025 ஜூலை 01 அன்று ரஷ்யாவின் கலினின்கிராட்டில், ரஷ்யாவிடம் இருந்து பெற்று, அதை செயல்படுத்திப் பணியில் இணைக்க உள்ளது. இந்த விழாவில் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். “தமல்” என்று பெயரிடப்பட்ட இது, கடந்த இருபது …

Read More »