Sunday, September 06 2026 | 07:46:38 AM
Breaking News

International

பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்

எண் ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம் 1 மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC) 2 அரசால் நிதியளிக்கப்பட்ட கடன் வரிகளில் மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைக் குறைத்தல் 3 இந்திய-மாலத்தீவுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்த (IMFTA) பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது 4 இந்திய-மாலத்தீவுகள் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை கூட்டாக வெளியீடு     எண் தொடங்கி வைத்தல்/ ஒப்படைப்பு 1 இந்தியாவின் வாங்குபவர்களின் …

Read More »

இங்கிலாந்துடனான விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவின் கடல் உணவுத் தொழில், 70% ஏற்றுமதி வளர்ச்சி காணும்

ஜூலை 24, 2025 அன்று விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இந்தியா-இங்கிலாந்து பொருளாதார உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொழுத்தானது. மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வணிகம் மற்றும் வர்த்தக அமைச்சர்  திரு. ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரால் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது. குறிப்பாக, கடல் துறையைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை நீக்குகிறது, இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக இறால், உறைந்த மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கடல் பொருட்களின் ஏற்றுமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜவுளி, தோல் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளுடன் அதன் முக்கிய கடல் உணவு இலக்குகளில் ஒன்றான இந்தியாவின் இருப்பை அதிகரிக்கும். தற்போது இங்கிலாந்துக்கு இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதிகளில் வன்னாமி இறால், உறைந்த கணவாய், நண்டுகள், உறைந்த மீன்கள் மற்றும் கரும்புலி இறால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின்  வரி இல்லாத அணுகலின் கீழ் மேலும் சந்தைப் பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி 7.38 பில்லியன் டாலரை (ரூ 60,523 கோடி) எட்டியது, ஒப்பந்தம்  இப்போது அமலில் உள்ளதால், வரும் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான கடல்சார் ஏற்றுமதியில் 70% அதிகரிப்பு இருக்கும் என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மீன்வளத் துறை சுமார் 28 மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்களிக்கிறது. 2014–15 …

Read More »

நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை

மேன்மைதங்கிய அதிபர் அம்மையார் அவர்களே, துணை அதிபர் அவர்களே, பிரதமர் அவர்களே, நமீபியாவின்   அமைச்சர் பெருமக்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, நமீபியா நாட்டின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட்  வெல்விட்ஸ்சியா மிரபிலிஸ்’ விருதை அந்நாட்டு அதிபரிடமிருந்து பெறுவது எனக்கு மிகுந்த பெருமையையும் மரியாதையையும் அளிப்பதாக உள்ளது. இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். …

Read More »

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு

பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார். இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு …

Read More »

இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை

பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். 1. பாதுகாப்பு: கூட்டு ராணுவப் பயிற்சி, உயர்நிலை பாதுகாப்பு தூதுக் குழுக்களின் பரிமாற்றம் …

Read More »

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா அவர்களே, இருநாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம். “போவா டார்டே”. ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம். பிரேசில் அதிபரால் பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டிருக்கும் தருணமானது எனக்கு மட்டும் பெருமிதமும், …

Read More »

பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை

உயர்மதிப்பாளர்களே, மேன்மை தங்கியவர்களே, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. நண்பர்களே, பிரிக்ஸ் அமைப்பின் பலதரப்புவாதத்தின்  மீதான  நம்பிக்கை இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது. இன்று, உலக நாடுகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. மேலும்  உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றச் சூழலை திறம்பட எதிர்கொள்வதன் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரும் காலங்களில் பிரிக்ஸ் அமைப்பு பல்வேறு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உருவாகும் வகையில் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான சில பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்: முதலாவதாக,  பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கீழ், பொருளாதார ஒத்துழைப்பு சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அமைப்பின் வர்த்தக குழு  மற்றும் பெண்கள் வர்த்தக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேசிலின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின், சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது. பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆதரிக்க ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று நிலையை இந்தியா வழங்கியுள்ளது.  திட்டங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், புதிய வளர்ச்சி வங்கியின் தேவை சார்ந்த  அணுகுமுறைகள், நீண்டகால நிதிசார் நிலைத்தன்மை, கடன் மதிப்பீடு ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்பட  வேண்டும்.  பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பன்முகத்தன்மை மீதான நம்பிக்கை மேம்படும். இரண்டாவதாக, இன்று உலக அளவில் உள்ள வளரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்பிடமிருந்து சில  எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள்  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள  பிரிக்ஸ்  வேளாண் ஆராய்ச்சித் தளம், விவசாயத்தில்  ஆராய்ச்சிப் பணிகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு  முயற்சியாகும். வேளாண் – உயிரியல் தொழில்நுட்பம், துல்லியமான விவசாய நடைமுறைகள்,  பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் உலக அளவில் வேளாண் பணிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக உருவெடுக்கச் செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு இதன் நன்மைகளை விரிவுபடுத்த முடியும். இதேபோல், கல்வி இதழ்களுக்கான நாடு தழுவிய அணுகுமுறையை  உறுதி செய்வதற்காக இந்தியா ‘ஒரே நாடு, ஒரே சந்தா’  என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதர பிரிக்ஸ் நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் தென்பகுதியில் உள்ள நாடுகளில் இத்தகைய முயற்சிகள் மதிப்பு வாய்ந்த நடவடிக்கையாக செயல்படும். பிரிக்ஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி களஞ்சியத்தை உருவாக்குவது குறித்து உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். மூன்றாவதாக, அரியவகை கனிமங்கள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் இத்தகைய வளங்களை அதன் சுயநலத்திற்காகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். நான்காவதாக, 21-ம் நூற்றாண்டில்,  மக்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வு ஆகியவை பெரும்பாலும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளன.  குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருபுறம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அன்றாட வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்த முடியும்.  மறுபுறம், இது தொடர்பான அபாயங்கள், நெறிமுறைகள், சார்பு நிலை தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளன. இந்தியாவின் அணுகுமுறை மற்றும் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. மனித குலத்தின் மாண்புகள் ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது. “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுத்  தொழில்நுட்பம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், இன்று இந்தியாவில் விவசாயம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய  நிர்வாக கட்டமைப்புகள் சவால்களுக்கு தீர்வு காண்பதிலும்,  புதுமைகளை ஊக்குவிப்பதிலும் சம அளவிலான முக்கியத்துவம்  அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தும் வகையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கக்கூடிய அளவில் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உள்ளமுக்கிய அம்சங்களை அடையாளம் காணவும்  வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கவும் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவிடும். இன்றைய அமர்வில் வெளியிடப்படும் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் நிர்வாகம்  மற்றும் நடைமுறைகள் குறித்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் அறிக்கை” இதற்கான ஒரு நேர்மறையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்காக, அடுத்த ஆண்டு இந்தியாவில் “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டை” நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நண்பர்களே, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும்  அவற்றை  நிறைவேற்ற, “முன்மாதிரி நாடாக  செயல்படுவது என்ற கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் பொதுவான இலக்குகளை அடைய உறுப்பு நாடுகள் அனைத்துடனும் இணைந்து செயல்பட இந்தியா உறுதியுடன் உள்ளது. மிக்க நன்றி.

Read More »

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

பிரதமர் திரு  நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 – 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும்  உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி …

Read More »

ரியோ டி ஜெனிரோ பிரகடனம் – வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

“அனைத்து நாடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கிய நீடித்த  நிர்வாகத்திற்கான உலகின் தென்பகுதியில் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் , ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பரம் நாடுகளிடையேயான மதிப்பு, இறையாண்மை, சமத்துவம், ஒற்றுமை, ஜனநாயக நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில்  பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற …

Read More »

அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, ​​அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட …

Read More »