Friday, July 24 2026 | 02:34:05 PM
Breaking News

International

ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு

பிரேசிலின் பெலெமில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 30-வது மாநாட்டின் (UNFCCC CoP30) நிறைவு அமர்வில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பல குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியா வலுவான ஆதரவைத் தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வழங்குவது தொடர்பான நீண்டகால கடமைகளை இந்தியா வலியுறுத்தியது . நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரிவு …

Read More »

இஸ்ரேலுடன் உத்திசார் ஒத்துழைப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னெடுத்துள்ளார்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விவசாயம், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார். நவம்பர் 21 அன்று நடந்த கூட்டங்களின் போது, விவசாயத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக திரு பியூஷ் கோயல், இஸ்ரேலிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு. அவி டிச்சரை சந்தித்தார். இஸ்ரேலின் 25 ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், அதன் மேம்பட்ட விதை மேம்பாட்டு உத்திகள் மற்றும் விவசாயத்திற்கான நீர் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்களில் நாட்டின் உலகளாவிய தலைமைத்துவம் குறித்து அமைச்சர் டிச்சர்,  திரு கோயலுக்கு விளக்கினார். பின்னர்  திரு கோயல், பெரெஸ் அமைதி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தைப் பார்வையிட்டார், அங்கு இஸ்ரேலின் முன்னோடி தொழில்நுட்ப சூழல் அமைப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் அயர்ன் டோம் அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிவேக  தீர்வுகள் பற்றிய விளக்கங்களுடன் அவருக்குக் விளக்கப்பட்டன. பெரெஸ் மையத்தை இஸ்ரேலின் படைப்பாற்றல், புதுமை மற்றும் சமூக தாக்கத்தின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிறுவனம் என்று அவர் விவரித்தார். முன்னதாக, நவம்பர் 20 அன்று, திரு பியூஷ் கோயல் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் திரு. நிர் பர்கட் அவர்களை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய பாதையை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இஸ்ரேல் வணிக மன்றம் நடைபெற்றது, இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மன்றத்தில் தொழில்நுட்ப அமர்வுகள்  இடம்பெற்றன, அவை தொழில்நுட்பம், புதுமை, …

Read More »

தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள,  திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால்,  ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில்  இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20  அமைப்பில்  உறுப்பினராகியது. இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும்.  …

Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் நாடுகள் கையெழுத்து

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில்  உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் …

Read More »

வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேல் செல்கிறார்

இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கட்டின் அழைப்பின் பேரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நவம்பர் 20 முதல் 22 வரை  அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அவரது இந்தப் பயணம்  இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், முதலீடு போன்ற …

Read More »

சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்

சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அளித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தேவையான உதவியையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்கு சவுதி …

Read More »

இந்தியா – யூரேசிய பொருளாதார யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்

மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆய்வு செய்தார். யூரேசிய பொருளாதார ஆணையத்தின் வர்த்தகப் பொறுப்புகளுக்கான அமைச்சர் திரு ஆண்ட்ரி ஸ்லெப்னேவ், ரஷ்ய தொழில் – வர்த்தகத் துறை துணை அமைச்சர் திரு மிகைல் யுரின் ஆகியோரையும் அவர் சந்தித்தார். மேலும் இந்திய – ரஷ்ய தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் …

Read More »

தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை

தென்கிழக்கு ஆசியாவில் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சுஷீல் மேனனின் தலைமையில், கிழக்கு கடற்படையின் இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் டெல்லி, சக்தி மற்றும் கில்டன் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவை வந்தடைந்தன. இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் கடல்சார் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்களால் இந்திய கப்பல்களுக்கு அன்பான …

Read More »

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

புது டெல்லி, ஜூலை 27: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” (நிசார்) இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு தெரிவித்தார். ஊடகங்களுக்கு விளக்கமளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் பணிகள் முடிவடைந்து இருப்பதால் அது ஜூலை 30, …

Read More »

பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்

எண் ஒப்பந்தம்/புரிந்துணர்வு ஒப்பந்தம் 1 மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC) 2 அரசால் நிதியளிக்கப்பட்ட கடன் வரிகளில் மாலத்தீவின் வருடாந்திர கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைக் குறைத்தல் 3 இந்திய-மாலத்தீவுகள் தடையில்லா வர்த்தக ஒப்பந்த (IMFTA) பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது 4 இந்திய-மாலத்தீவுகள் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை கூட்டாக வெளியீடு     எண் தொடங்கி வைத்தல்/ ஒப்படைப்பு 1 இந்தியாவின் வாங்குபவர்களின் …

Read More »