Friday, July 24 2026 | 12:24:45 AM
Breaking News

International

இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக …

Read More »

புது தில்லியில் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உச்சிமாநாட்டில் ஆயுஷ் கண்காட்சி

மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்புடன்  இணைந்து, 2024 டிசம்பர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இரண்டாவது உலக சுகாதார நிறுவன உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக ஆயுஷ் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி அமைகிறது. இது இந்தியாவின் ஆயுஷ் மருத்துவ முறைகளையும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் …

Read More »

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கான பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

நான் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறேன். இந்த 3 நாடுகளுடனும் இந்தியா பழமையான நாகரீக உறவுகளையும், விரிவான சமகால இருதரப்பு உறவுகளையும் பகிர்ந்து கொள்கிறது. முதலாவதாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐபின் அல் ஹூசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறேன்.  இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. இந்தப் …

Read More »

இணையதள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல்

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான சிஇஆர்டி-ஐஎன், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்காக இணைய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வை புதுதில்லியில் நேற்று (டிசம்பர் 12, 2025) நடத்தியது. இந்த அமர்விற்கு புதுதில்லியில் உள்ள சிஇஆர்டி-ஐஎன்-னின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு கிருஷ்ணன் குமார் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உட்பட அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துரைத்தார். இணையதள பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்பு மதிப்பீடு, தகவல் பகிர்வு இணையதள குற்றச் சம்பவங்களுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள சிறப்பு பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் சிஇஆர்டி-ஐஎன்-னின் பங்கு குறித்து டாக்டர் பாஹ்ல் எடுத்துரைத்தார். தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் முன்கூட்டியே பாதுகாப்பை உறுதிசெய்து, அச்சுறுத்தல்களுக்கு எதிராக உரிய நேரத்தில் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் சிஇஆர்டி-ஐஎன் வழங்குகிறது …

Read More »

பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-புருனே இடையே கூட்டு பணிக்குழுக் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இந்தியா-புருனே இடையே கூட்டு பணிக்குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 09, 2025) புது தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்விரு நாடுகளுக்கும் பரஸ்பரம் ஒத்துழைப்பை மேலும் வலுவடையச் செய்ய உதவிடும். இராணுவப் பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், திறன் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் …

Read More »

ஆபரேசன் சாகர் பந்து – இலங்கைக்கு 1000 டன் நிவாரணப் பொருட்களை வழங்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது

இலங்கைக்கு தேடல் மற்றும் மீட்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை  வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்காக இந்திய கடற்படை ஐஎன்எஸ் கரியல், எல்சியு 54, எல்சியு 51, எல்சியு 57 ஆகிய நான்கு கப்பல்களை அனுப்பியுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் சுகன்யா ஆகியவை முன்னர் நிவாரண உதவி …

Read More »

ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்

இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் அவருடன் நடைபெறும் உரையாடல்களை எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையேயான நட்பு காலத்தால் மாறாத ஒன்று எனவும், இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் …

Read More »

இந்தியா-ரஷ்யா இடையேயான வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், கிருஷி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர் திருமதி ஒக்ஸானா லூட்டுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அங்கு இரு தரப்பினரும் தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததுடன்,  எதிர்கால ஒத்துழைப்பு வழிவகைகள் குறித்து ஆலோசித்தனர். இந்தியா-ரஷ்யா உறவுகள் நம்பிக்கை, நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர்கள் குறிப்பிட்டனர். தற்போது சுமார் 3.5 பில்லியன் …

Read More »

அரியவகைக் கனிமங்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்

அரியவகைக் கனிமங்கள், கனிம வளங்களைப்  பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, அணுசக்தி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலி அமைப்பு போன்ற துறைகளில், கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார். புதுதில்லியில் உள்ள இந்திய – கனடா நாடுகளின் வர்த்தக சபையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், …

Read More »

‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ – முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் …

Read More »