Friday, January 02 2026 | 09:42:23 PM
Breaking News

International

இந்தியா – கத்தார் கூட்டறிக்கை

இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு …

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக உயர்தர  சங்கோலா, பாக்வா ஆகிய இந்திய மாதுளை ரகங்களை கடல்வழியாக முதல் முறையாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விளைபொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். ஆஸ்திரேலியாவிற்கு மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான …

Read More »

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 7.21% அதிகரிப்பு

ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல்-ஜனவரி 2024-25 காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 682.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல்-ஜனவரி 2023-24-ல் 636.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 7.21% வளர்ச்சியாகும். இந்தக் காலகட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஏப்ரல்-ஜனவரி 2023-24 காலகட்டத்தில் 353.97 …

Read More »

இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம்: புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

இந்தியா-கத்தார் கூட்டு வர்த்தக மன்றக் கூட்டம் நாளை (18.02.2025)  புதுதில்லியில் நடைபெறுகிறது. இந்தியாவும் கத்தாரும் தங்கள் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையும் (DPIIT) இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தியா – கர்த்தார் இடையே முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை …

Read More »

சர்வதேச கடற்படை ஆய்வு 25, கொமோடோ பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல், கண்காணிப்பு விமானம் இந்தோனேசியாவுக்கு சென்றடைந்தன

பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கடற்படை மறுஆய்வு (IFR-ஐஎஃப்ஆர்) 2025-ல் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஷர்துல், நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு பி 8 ஐ விமானம் ஆகியவை இந்தோனேசியாவின் பாலி சென்றுள்ளன. மதிப்புமிக்க பன்னாட்டு கடற்படை நிகழ்வான ஐஎஃப்ஆர், இந்தோனேஷிய அதிபரால் ஆய்வு செய்யப்படும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்கும். இந்த பயணத்தில், இந்திய கடற்படை, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டம், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும். …

Read More »

இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்”  குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …

Read More »

தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை

நமோ புத்தயா! தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, எனது நண்பர் திரு ஷின்சோ அபேவை நினைவுகூர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். 2015-ம் ஆண்டில், சம்வாத்  பற்றிய யோசனை …

Read More »

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா – இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது- மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே 2025 ஜனவரி 25-ம்  தேதி புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த  …

Read More »

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் …

Read More »

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை  பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச …

Read More »