பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையிலான இந்தியக் குழு நாளை முதல் (2025 ஜூன் 23) 26-ம் தேதி வரை 3 நாட்கள் கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் கட்டமாக இந்தியா, கென்யா நாடுகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் போர் நினைவுச்சின்னத்தை தைட்டா-டவேட்டா பகுதியில் கூட்டாகத் திறந்து வைப்பதற்காக நாளை (2025 ஜூன் 23) பாதுகாப்பு இணையமைச்சர் கென்யாவுக்குச் செல்கிறார். …
Read More »இந்தியா – குரோஷியா தலைவர்களின் அறிக்கை
குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து குரோஷியா பிரதமர் பிளென்கோவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தனர். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றிய நெருக்கமான, நட்புறவுகளை இந்தியாவும் குரோஷியாவும் கொண்டுள்ளன என்பதை …
Read More »குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். நண்பர்களே, இந்தியாவும் குரோஷியாவும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்மைத்துவம் …
Read More »லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்
லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …
Read More »சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …
Read More »இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்
1. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் …
Read More »இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் …
Read More »சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன். சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு …
Read More »ஏஐ 171 விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு செய்தியாளர் சந்திப்பு – விரிவான பல்நோக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இன்று புதுதில்லியில் உள்ள உதான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 171-ன் துயர விபத்து குறித்தும், அரசின் உடனடி நடவடிக்கைகள், நடந்து வரும் விசாரணைகளின் நிலை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு விளக்கினார். உயிர் இழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. இதில் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு பேசியது: “ஜூன் 12, 2025 அன்று, அகமதாபாத் – லண்டன் இடையே இயக்கப்படும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் ஏஐ 171, புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தின் மக்கள் தொகை மிகுந்த மேகனி நகர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். இறந்தவர்களில் பயணிகள், இளம் மருத்துவ மாணவர்கள் அடங்குவர். உடனடியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு காயமடைந்தவர்களுடன் கலந்துரையாடினார். மீட்பு, நிவாரண முயற்சிகளை ஆய்வு செய்தார். விமான நிலையத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். சம்பவம் நடந்த உடனேயே உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சம்பவ இடத்திற்கு சென்று, கள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு மத்திய அமைப்புகள், நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். சம்பவம் நடந்த உடனேயே சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், அவசர சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களையும் சந்தித்தனர். விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB- ஏஏஐபி), அதே நாளில் விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியது. ஏஏஐபி-யின் தலைமை இயக்குநர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உடனடியாக அனுப்பப்பட்டது. ஜூன் 13 அன்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. டிகோடிங் செயல்முறை விமானத்தின் இறுதி தருணங்கள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்பரிமாண மறுஆய்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணையை நடத்துவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பின்வருவனவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர்: * சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் * உள்துறை அமைச்சகம் * குஜராத் அரசு * டிஜிசிஏ, பிசிஏஎஸ், இந்திய விமானப்படை, புலனாய்வுப் பணியகம் * மாநில பேரிடர் மீட்பு ஆணையம் * தேசிய, மாநில அளவிலான தடயவியல் நிபுணர்கள் இந்தக் குழு ஜூன் 16 திங்கள்கிழமை தனது பணகளைத் தொடங்க உள்ளது. சரிபார்க்கப்படாத தகவல்களைத் தவிர்க்குமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. விசாரணைகள் முன்னேறும்போது அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் பகிரப்படும். உண்மையை வெளிக்கொணர்வதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.”
Read More »கொச்சியில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பலில் தீயைக் கட்டுபடுத்த கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை, அதிக ஆபத்துகளுக்கு இடையில் தீவிர நடவடிக்கை
சிங்கப்பூர் கப்பல் எம்.வி. வான் ஹாய் 503-ல் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி), இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இவை இணைந்து, நேற்று (ஜூன் 13, 2025) கடலில் தீ விபத்தில் சிக்கிய கொள்கலன் கப்பலை வெற்றிகரமாக இழுத்துச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், பலத்த மேற்கு காற்று ஆகியவை காரணமாக அந்தக் கப்பல் கரையை நோக்கி ஆபத்தான முறையில் நகர்ந்தது. இந்த நிலையில், ஜூன் 13 அன்று கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிகாப்டர், மிகவும் சவாலான சூழ்நிலையில் மீட்புக் குழு உறுப்பினர்களை கப்பலில் வெற்றிகரமாக இணைத்தது. பின்னர் அந்தக் குழு கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் 600 மீட்டர் இழுவைக் கயிற்றை இணைத்தது. இந்தக் கப்பல் இப்போது 1.8 கடல் மைல் வேகத்தில் மேற்கு நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் 35 கடல் மைல்கள் தொலைவு உள்ளது. கடலோர காவல் படையின் 3 ரோந்துக் கப்பல்கள், அந்த தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, அடர்ந்த புகை மட்டுமே கப்பலில் உள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி, அதன் விதி உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படும் வரை, கப்பல் இந்திய கடற்கரையிலிருந்து குறைந்தது 50 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய கடலோர காவல் படை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கூடுதல் தீயணைப்பு இழுவைக் கப்பல்கள் வருவதால் நிலைமை மேலும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »
Matribhumi Samachar Tamil