Friday, April 10 2026 | 01:32:22 AM
Breaking News

சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது

விமானப்படையின் சிறப்புப் படையான கருட்’ கமாண்டோக்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) அணிந்து செல்லும் சம்பிரதாய அணிவகுப்பு இன்று (21 டிசம்பர் 2024) சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் (GRTC) நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விமானப் பணியாளர் செயல்பாடுகளின் (போக்குவரத்து – ஹெலிகாப்டர்) துணைத் தலைவர் அணிவகுப்பை பார்வையிட்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் ‘கருட்’ வீரர்களுக்கு அவர்களின் வெற்றிகரமான தேர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இளம் கமாண்டோக்களிடையே உரையாற்றிய அவர் , வேகமாக மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புப் படை திறன்களை மேம்படுத்துவது, கடுமையான பயிற்சி அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெற்றி பெற்ற ‘கருட்’ பயிற்சியாளர்களுக்கு மெரூன் பெரட், கருட் தேர்ச்சி பேட்ஜ் ஆகியவற்றை வழங்கிய அவர், விருது பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார். மெரூன் பெரெட் சடங்கு அணிவகுப்பு என்பது ‘கருட்’ வீரர்களுக்கு பெருமை, சாதனையின் தருணமாகும். உயரடுக்கு ‘கருட்’ படையில் இணைந்துள்ள ‘இளம் சிறப்புப் படையினர், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனுக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள்.

Read More »

டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் பாரத்நெட்

பாரத்நெட் அறிமுகம்: டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் பயன்பாடுகளும் அதிகரித்து வரும் உலகில், இணைய இணைப்பு பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், ஆளுகை ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய அம்சமாக அந்த டிஜிட்டல் அம்சங்கள் மாறியுள்ளன. இதில் டிஜிட்டல் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இது அதிகமாக இருந்தது. இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு அக்டோபர் 2011-ல் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் குறைந்த செலவில் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய திட்டமாகும். தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த முன்முயற்சி, கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகர்ப்புற – கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் முயல்கிறது. பாரத்நெட் என்பது வெறும் உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல. இது உண்மையான டிஜிட்டல் தேசத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் முதுகெலும்பாகும். திருத்தப்பட்ட பாரத்நெட் 2023: ஆகஸ்ட் 2023-ல் , திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு (ABP) அரசு ஒப்புதல் அளித்தது. 2.64 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை (OF) இணைப்பு மூலம் இணைய அணுகலை இந்தத் திட்டம் வழங்குகிறது. மேலும் கிராம பஞ்சாயத்து அல்லாத மீதமுள்ள கிராமங்களுக்கு (உத்தேசமாக 3.8 லட்சம்) தேவையின் அடிப்படையில் கண்ணாடி இழை இணைப்பை வழங்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. ரூ.1,39,579 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா நிதியம் டிஜிட்டல் பாரத் நிதியம் (டிபிஎன்) என்பது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம், அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியமாகும் . இது யுனிவர்சல் சர்வீஸ் ஒபிளிகேஷன் ஃபண்டுக்கு (யுஎஸ்ஓஎஃப்) மாற்றாக இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள்கள்: *கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் மலிவு மற்றும் உயர்தர மொபைல், டிஜிட்டல் சேவைகளை வழங்குதல் *அறிவு, தகவலுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல் *டிஜிட்டல் இணைப்பு, சேவைகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் *டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, அணுகலுக்கான தடைகளை அகற்றவும் பாரத்நெட்டின் செயல்பாடு பாரத்நெட் உலகின் மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டமாக செயல்படுகிறது. இத்திட்டம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL ) என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் 25.02.2012 அன்று இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30.04.2016 அன்று, தொலைத் தொடர்பு ஆணையம் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. கட்டம் 1: தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க கண்ணாடௌ கேபிள்களை அமைப்பதில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 2017-ல் இது நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம்: கண்ணாடி இழை, ரேடியோ, செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதலாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த கட்டம் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது. கட்டம் 3: 5ஜி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலைவரிசை திறனை அதிகரிப்பதன் மூலமும், வலுவான கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதன் மூலமும் நெட்வொர்க்கை எதிர்காலத்தில் சரிசெய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுகல் தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது . பாரத்நெட்டின் தாக்கம்: பாரத்நெட் கிராமப்புற இந்தியாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது. இந்தத் திட்டம் தொலைதூர கிராமங்களை அதிவேக இணையத்துடன் இணைத்து, மின்-ஆளுமை சேவைகள், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் ஆகியவற்றை அணுக உதவுகிறது. இந்தியாவில் இணைய உள்ளடக்கம்: இந்தியாவில் இணைய இணைப்பை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அக்டோபர், 2024 நிலவரப்படி: *783 மாவட்டங்களில் உள்ள 4ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை 24,96,644 ஐ எட்டியுள்ளது . *779 மாவட்டங்களில் 4,62,084 பிடிஎஸ் நிறுவப்பட்டதன் மூலம் உலகில் 5G சேவைகளை இந்தியா மிக வேகமாக செயல்படுத்தியுள்ளது . *டேட்டாவின் விலை மார்ச் 2014-ல் ஒரு ஜிபி ரூ. 269 லிருந்து (மார்ச் 2014-ல்), தற்போது ரூ .9.08 ஆக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. *சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகம் மார்ச் 2014-ல் 1.30 எம்பிபிஎஸ் ஆக இருந்த்து. தற்போது 95.67 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது. *நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,15,836 கிராமங்களில் 4ஜி மொபைல் இணைப்பு உள்ளது . கிராமப்புற இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதற்கான இலக்கை பாரத்நெட் கொண்டுள்ளது. பரந்த வாய்ப்புகளுடன் இணைய விரும்பும் லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு இது ஒரு உயிர்நாடியாக திகழ்கிறது. வலுவான செயலாக்கம், தொடர்ச்சியான முயற்சிகளுடன், பாரத்நெட் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, பாரத்நெட் திட்டத்தின் இணைய சக்தி இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் மேம்படுத்தும்.

Read More »

தொழில் துறையில் புதிய உயரங்களைத் தொட உதவும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம்

இந்தியாவின் உற்பத்தித் துறை அதன் உலகளாவிய நிலையை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு சிந்தனை கொள்கைகளால் உந்தப்பட்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பரிணாமத்தின் மையமாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டம் உள்ளது. இது புதுமைகளை ஊக்குவித்தல், செயல்திறனை மேம்படுத்துதல்,  முக்கியமான தொழில்களில் போட்டித்தன்மையை அதிகரித்தல், தேசத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுதல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சியாகும். மிஎல்ஐ திட்டம் முதலீடு, உற்பத்தி, வேலை உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது. ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 14 துறைகளில், ரூ .1.46 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது, இதன் விளைவாக ரூ.12.50 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி/விற்பனை அதிகரித்துள்ளது, 9.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கம் நடைபெற்றுள்ளது. ஏற்றுமதி ரூ .4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மின்னணுவியல், மருந்து, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன. 2022-23,  23-24 நிதியாண்டில் முறையே 8 துறைகளில் ரூ.2,968 கோடியும், 9 துறைகளில் ரூ.6,753 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020-ல் தொடங்கப்பட்டது, பிஎல்ஐ திட்டம் தற்சார்பை நோக்கிய ஒரு பாய்ச்சல் ஆகும். உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும், உள்ளூர் முன்னேற்றம், உலகளாவிய போட்டித்திறன் ஆகிய இரண்டிற்கும் சக்தியளிக்கும் ஒரு செழிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன்களையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் ரூ.1.97 லட்சம் கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளன.  14 துறைகள்: *மொபைல் உற்பத்தி, குறிப்பிட்ட மின்னணு பாகங்கள், *ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல்ஸ், *மருத்துவ சாதனங்கள் உற்பத்தி *ஆட்டோமொபைல்கள், வாகன பாகங்கள் *மருந்துகள் *சிறப்பு ஸ்டீல் *தொலைத் தொடர்பு, நெட்வொர்க்கிங் தயாரிப்புகள் *மின்னணு/ தொழில்நுட்பத் தயாரிப்புகள் *வெள்ளைப் பொருட்கள் (ஏசி-கள், எல்இடி-கள்) *உணவுத் தயாரிப்புகள் *ஜவுளி தயாரிப்புகள்: எம்எம்எஎஃப் பிரிவு, தொழில்நுட்ப ஜவுளி *உயர் திறன் சூரிய சக்தி பிவி தொகுதிகள் *மேம்பட்ட வேதியியல் செல் (ACC) பேட்டரி *ட்ரோன்கள்,  ட்ரோன் பாகங்கள். பிஎல்ஐ திட்டங்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது, 14 துறைகளில் பிஎல்ஐ திட்டங்களின் கீழ் 764 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 764 ஒப்புதல்களில், உணவுப் பொருட்கள் துறை அதிகபட்சமாக 182 ஒப்புதல்களுடன் முதலிடத்திலும், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள் துறை 95 ஒப்புதல்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. பிஎல்ஐ திட்டம் இந்தியாவின் குறு,சிறு, நடுத்த தொழில்துறைச் சூழல் அமைப்பில் ஒரு சிறந்த தாக்கத்தை உருவாக்க தயாராக உள்ளது. இத்திட்டம் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியில் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கும் உலகளாவிய தலைமைக்கும் வழி வகுக்கிறது.

Read More »

குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”

Read More »

தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு பிரதமர் வலியுறுத்தல்

மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “கட்ச் உங்கள் அனைவருக்காகவும்  காத்திருக்கிறது! தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின்  அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள். மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.

Read More »

குவைத்தில் 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியைச் சந்திப்பதை பிரதமர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இன்று குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான திரு மங்கள் சைன் ஹந்தா ஜியை, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடலின் போது சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் பதிலளித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில்  திரு மங்கள் சைன் ஹந்தா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

Read More »

தியானத்தை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தியானம் என்பது ஒருவருடைய வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும்  பூமியிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது; “இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள்  தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில்  இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’.

Read More »

குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த  இதயபூர்வமான வரவேற்பு குறித்து  பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். குவைத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் திரு நரேந்திர மோடிதிரு  மங்கள் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டுள்ளதாவது: “குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்களிடம் இருந்து இதயபூர்வமான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நன்றி .  “இன்று மதியம் குவைத்தில் திரு மங்கல் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் நான் பாராட்டுகிறேன்’’.

Read More »

குவைத்தில் தொழிலாளர் முகாமைப் பிரதமர் பார்வையிட்டார்

குவைத் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் சுமார் 1500 இந்தியர்கள் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் நல்வாழ்வு குறித்துக் கேட்டறிந்தார். வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்குப் பிரதமர் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இந்த தொழிலாளர் முகாமுக்கு அவரது வருகை அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக இ-மைக்ரேட் தளம், மதாத் தளம், மேம்படுத்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புத் திட்டம் (பிரவாசி பாரதிய பீமா யோஜனா) போன்ற பல தொழில்நுட்ப அடிப்படையிலான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

Read More »

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.”

Read More »