நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குதாரர்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படையான கொள்கைகள் …
Read More »ஆயுஷ் மருத்துவமுறைகளின் தரவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் உலகளாவிய அறிக்கை
பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உலக சுகாதார அமைப்பு நோய்கள் குறித்த சர்வதேச வகைப்பாட்டிற்கு ஏற்ப அதன் புதுப்பிக்கும் நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின்படி பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான புதிய தொகுதியை அறிமுகப்படுத்துகிறது. இது ஆயுர்வேதம், சித்தா, யுனானி தொடர்பான பாரம்பரிய மருத்துவ முறைகளின் முறையான கண்காணிப்பு மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பில் ஒரு முக்கிய நிலையைக் குறிக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கான நெறிமுறைகள் …
Read More »சோல்(SOUL) தலைமைத்துவப் பண்பு மாநாட்டின் முதல் பதிப்பை தில்லியில் பிப்ரவரி 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 21-ம் தேதி காலை 11 மணியளவில் சோல் முதலாவது தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராகச் சிறப்புரையாற்றுகிறார். பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீக உலகம், பொதுக் கொள்கை, …
Read More »பிஎஸ்என்எல்-ன் ஒருங்கிணைந்த நிதிசார் நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரம்
செயல் நடவடிக்கை மூலமான வருவாய்: 31.12.2024 இல் நிறைவடைந்த காலாண்டில் வருவாய் ரூ.4,969 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் (31.12.2023) ரூ.4546 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பைக் காணமுடிகிறது. 31.12.2024 அன்று முடிவடைந்த 9 மாதங்கள்: வருவாய் ரூ.14,197 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (31.12.2023) ரூ.12,905 கோடியாக இருந்தது. 2024-25-ம் ஆண்டின் இறுதி காலாண்டில், இதே நிலை தொடரும். மற்ற வருவாய்: 31.12.2024 …
Read More »இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. …
Read More »வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள், வாய்ப்புகள்’ குறித்தக் கண்காட்சியை நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் நாளை நடத்துகிறது
நிலக்கரித் துறையில் வர்த்தக நிலக்கரிச் சுரங்க ஏலங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சாலை கண்காட்சியை கொல்கத்தாவில் 2025 பிப்ரவரி 19, அன்று நிலக்கரி அமைச்சகம் நடத்த உள்ளது. இதில் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், சுரங்க நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். நாட்டின் நிலக்கரித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்கான தளமாக இக் கண்காட்சி அமைக்கப்பட்டது. செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமான …
Read More »மண் வள அட்டை திட்டத்தின் 10 ஆண்டுகள்
மண் வள அட்டை திட்டம் நாளையுடன் (19.02.2025) 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2015 பிப்ரவரி 19 அன்று ராஜஸ்தானின் சூரத்கரில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டைகளை வழங்க மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மண் வள அட்டை விவசாயிகளுக்கு அவர்களின் மண்ணின் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல்களை வழங்குவதாகும். மண் ஆரோக்கியத்தையும் அதன் வளத்தையும் மேம்படுத்துவதற்குப் …
Read More »இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக், தமது மனைவி திருமதி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் கிருஷ்ணா, அனுஷ்காவுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார். அவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தியும் வருகை தந்திருந்தார். மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங், திரு சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். மாநிலங்களவை செயலாளர் திரு. பி.சி. மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த வருகையின் போது, …
Read More »இந்தியா – கத்தார் கூட்டறிக்கை
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு …
Read More »தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டுள்ளது
தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் கீழ் அனுமதிக்கப்படும் நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விதிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. இதன்படி, வணிக அமைப்புடன் நேரடி ஒப்பந்தம் செய்துகொள்வதற்குப் பதிலாக தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் கீழ், நெட்வொர்க் அங்கீகார அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு நெட்வொர்க் அங்கீகாரத்திற்கான விரிவான விதிமுறைகளை தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு -3 (1)(b)-ன் …
Read More »
Matribhumi Samachar Tamil