பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கடற்படை மறுஆய்வு (IFR-ஐஎஃப்ஆர்) 2025-ல் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஷர்துல், நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு பி 8 ஐ விமானம் ஆகியவை இந்தோனேசியாவின் பாலி சென்றுள்ளன. மதிப்புமிக்க பன்னாட்டு கடற்படை நிகழ்வான ஐஎஃப்ஆர், இந்தோனேஷிய அதிபரால் ஆய்வு செய்யப்படும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்கும். இந்த பயணத்தில், இந்திய கடற்படை, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டம், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும். …
Read More »பிரதமரின் யோகா விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் – ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு
சர்வதேச யோகா தினத்தின் (IDY2025) 2025 பதிப்பிற்கான மதிப்புமிக்க பிரதமரின் யோகா விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் யோகாவை பிரபலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, நிலையான முயற்சிகளை மேற்கொண்ட தனிநபர்கள், நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. பிரதமரின் யோகா விருதுகள், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு, வாழ்க்கை முறை தொடர்பான பாதிப்புகளை சரி செய்தல் ஆகியவற்றில் யோகாவின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தேசிய …
Read More »புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். …
Read More »பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது …
Read More »புதிய வடிவில் நடைபெற்ற காவலர் மாற்ற விழாவை குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்
குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இன்று (பிப்ரவரி 16, 2025) காலை புதிய வடிவத்தில் நடைபெற்ற காவலர் மாற்ற விழாவின் தொடக்க நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். அடுத்த சனிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 22, 2025 முதல் இந்த விழாவை பார்வையாளர்கள் காண அனுமதிக்கப்படுவார்கள், அப்போது, குடியரசுத்தலைவர் மாளிகையின் பின்னணியில் ஒரு இயக்க ஆற்றல் மிகுந்த காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை பொது மக்கள் காணலாம். குடியரசுத்தலைவரின் …
Read More »தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பழங்குடி சமூகத்தின் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு சந்தையுடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியின சமுதாயத்தின் கைவினைப் …
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …
Read More »குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆய்வு
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் பாட்டியா தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், திட்டக் கண்காணிப்புக் குழு, மேம்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு மூலம் பிரச்சினை தீர்வை …
Read More »நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ரூ 170 கோடி மதிப்புள்ள சிஎஸ்ஆர் திட்டங்களுக்கு ஒப்புதல்
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியாவின் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் , 24-25 நிதியாண்டில் பல்வேறு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கு ரூ 170 கோடியை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சிகள் நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்பை கணிசமாக அதிகரிக்கும். இந்த ஒதுக்கீடு 24-25 நிதியாண்டிற்கான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் …
Read More »பிப்ரவரி 16 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சுமார் 4 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுகிறார். பிப்ரவரி 14 முதல் 17 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஒரு மெகா உலகளாவிய நிகழ்வான பாரத் டெக்ஸ் 2025 தனித்துவமானது. ஏனெனில் இது மூலப்பொருட்கள் முதல் முடிக்கப்பட்ட பொருட்கள் வரை முழு ஜவுளி …
Read More »
Matribhumi Samachar Tamil