Monday, February 02 2026 | 05:24:57 AM
Breaking News

அல்ஜீரியா ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சைத் சானெக்ரிஹா இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்

அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு …

Read More »

கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும் இந்திய கார்பன் சந்தைகள் குறித்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இந்த மைல்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு நிதின் …

Read More »

நாட்டின் எரிசக்தி ஆதாரங்களில் அணு எரிசக்தி திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க உதவும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

2025-26-ம்  நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “அணுசக்தி இயக்கம்” நாட்டின் எரிசக்தி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அணுமின் உற்பத்தி  இந்தியாவின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக மாற உதவும்  என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுமின் உற்பத்தியின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டினர். எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு அணுமின் …

Read More »

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது. …

Read More »

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை, ஆன்மீகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்குப் பார்வையாளர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் அவரது பங்களிப்புகளைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: மேன்மைமிக்க இளவரசர் நான்காம் கரீம் ஆகா கான் …

Read More »

ஹெச்டிபிடி விதைகள்

உரிய கொள்கை நடவடிக்கைகள், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு, கிராம அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம்  வேளாண் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், நமோ கிசான் திட்டம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்கின்றன. மத்திய அரசு வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. 2013-14ம் ஆண்டில் ரூ. 21933.50 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு  2024-25 ஆம் ஆண்டில் 1,22,528.77 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஆதரவின் கீழ் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பானது அதன் நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் மேம்பட்ட தரத்துடன் பல்வேறு தன்மை கொண்ட புதிய கலப்பின பயிர் ரகங்களை உருவாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2024) 92 வகையான சோயாபீன்ஸ், 239 வகையான மக்காச்சோளம், 331 வகையான பருத்திபீட்டா பருத்தி ஆகியவை வெளியிடப்பட்டு வணிக சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வகைகளின் உயர் விளைச்சல் வகைகள், அவற்றின் மேலாண்மை தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் போன்றவை நாட்டின் விவசாயிகளுக்கு தவறாமல் பரிந்துரைக்கப்படுகின்றன. பருத்தி, மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவற்றில் தற்போதுள்ள இயந்திர மற்றும் இரசாயன களைக் கட்டுப்பாட்டு உத்திகளுடன் பல்வேறு களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, வேளாண் விவசாய மையங்கள், மாநில விவசாயத் துறைகள் மூலம் பெரும் அளவில் விவசாயிகளிடையே பரப்பப்பட்டுள்ளன. மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் வேளாண் துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி இந்தத் தகவலை தெரிவித்தார்.

Read More »

வேளாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்

விவசாயிகளின் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் விவசாயத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு பல முக்கிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்பது பயிர் கண்காணிப்பு, மண் மேலாண்மை மற்றும் வானிலை முன்னறிவிப்புக்காக செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2900 வகைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் 2661 வகைகள் …

Read More »

வேளாண் மையங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் 4 ஆராய்ச்சி நிறுவனங்களையும் 10 பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவியுள்ளது. இந்த நிறுவனங்கள் நாட்டின் பிற பகுதிகளின் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அத்துடன் மாவட்ட அளவில், உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்காக மேற்கு வங்கத்தில் 23 வேளாண் ஆராய்ச்சி மையங்களும்  நிறுவப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களும் …

Read More »

ரபி பயிர் விதைப்பு 661.03 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது

2025 பிப்ரவரி 4-ம் தேதி நிலவரப்படி ரபி பயிர்கள் சாகுபடி பரப்பளவின் முன்னேற்றத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 318.33 லட்சம் ஹெக்டேராக இருந்த கோதுமை சாகுபடி பரப்பளவு, இந்த ஆண்டு இதுவரை 324.38 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 42.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இது 40.59 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137.80 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 140.89 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. சிறு தானியங்கள் இந்த ஆண்டு 55.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் மொத்தம் 661.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இது 651.42 லட்சம் ஹெக்டேராக இருந்தது.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें   ऑडियो बुक : भारत …

Read More »

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு. பார்ட் டி வெவருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பெல்ஜியம் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு பார்ட் டி வெவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பார்ட் டி வெவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-பெல்ஜியம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், …

Read More »