எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று 2025ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல். நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். ஒருஒரு முறையும் மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெறும், ஆனால் இந்த முறை, நாம் ஒரு வாரம் முன்னதாகவே, நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கின்றோம். ஏனென்றால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நமது குடியரசுத் தினமாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான முதன்மையான நல்வாழ்த்துக்களைத் …
Read More »மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது
மின்சார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2025 ஜனவரி 16 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை (RDSS) செயல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எரிசக்தி …
Read More »சட்டப்பூர்வ நில உரிமையுடன் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் -65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகள் விநியோகம்
“கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமைப் பணியாகும்” –பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ்தினத்தன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்வாமித்வா திட்டம், கிராம பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு “உரிமைகப் பதிவு” வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நில எல்லை வரையரைக்கு, மேம்பட்ட ட்ரோன், ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த திட்டம் சொத்து பணமாக்குதலை …
Read More »சுரங்க அமைச்சகம் டிஎம்எப் கண்காட்சியை கோனார்க் சூரிய கோவிலில் திறந்துள்ளது
சுரங்க அமைச்சகம், ஒடிசா அரசாங்கத்துடன் இணைந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை டிஎம்எப் கண்காட்சியை கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலில் அமைத்துள்ளது. 2025 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, நிலையான வளர்ச்சியின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. சுரங்க அமைச்சகம், நால்கோ மற்றும் ஓஎம்சி அதிகாரிகள் முன்னிலையில், சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலர் திருமதி ஃபரிதா எம்.நாயக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். “நிலையான வளர்ச்சியின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சியில், டிஎம்எப்-ஆதரவு சுயஉதவி குழுக்கள் , இந்திய புவியியல் ஆய்வு , இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் , நால்கோ ஆகியவற்றின் பணிகளை வெளிப்படுத்தும் 18 துடிப்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்குகள் , உள்ளூர் கைவினைப்பொருட்கள், புதுமையான வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகின்றன, சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும், நிலையான நடைமுறைகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்ப்பதிலும் டிஎம்எப் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அமைச்சகத்தின் வலுவான உறுதிப்பாட்டை திருமதி நாயக் எடுத்துரைத்தார். டிஎம்எப்-ன் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இயக்குவதில் தீவிரமாக பங்கேற்ற ஒடிசா அரசு, பெருநிறுவன பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகளை அவர் பாராட்டினார். வரலாற்று மகத்துவம் கொண்ட சூரியன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, நவீன நிலையான வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் இணைக்கிறது. இக்கண்காட்சி உள்ளூர் சமூகங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது, சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்கால ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு மாறும் தளத்தை வழங்குகிறது. நிலையான நடைமுறைகளைச் செயல்படுத்துதல், முழுமையான சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதற்கு சுரங்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தக் கண்காட்சி முன்னெடுக்கிறது.
Read More »இந்தியா: உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரம்
முகவுரை உலகப் பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளது. உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையின் ஜனவரி 2025 பதிப்பு, இந்தியாவின் பொருளாதாரம் FY26 மற்றும் FY27 ஆகிய இரண்டிலும் 6.7% என்ற நிலையான விகிதத்தில் வளரும் என்று கணித்துள்ளது, இது உலகளாவிய மற்றும் பிராந்திய சகாக்களை கணிசமாக விஞ்சும். …
Read More »ஸ்வமித்வா பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். நிகழ்வின் போது, ஸ்வமித்வா திட்டம் தொடர்பான ஐந்து பயனாளிகளின் அனுபவங்களை அறிய அவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த ஸ்வமித்வா …
Read More »ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆகியவை இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில் உள்நாட்டுத் தயாரிப்பு ரோபோவை உருவாக்கியுள்ளன
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்-அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர். ‘PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட …
Read More »ஊரக இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: ஸ்வமிதா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை வழங்குகிறார்
இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளித்தலையும் நிர்வாகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லை குறிக்கும் வகையிலும் நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார். சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு …
Read More »நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்கான் ஒப்பந்தம்
நேபாளத்தில் 900 மெகாவாட் மேல் கர்னாலி நீர்மின் உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, எஸ்ஜெவிஎன் நிறுவனம், ஜிஎம்ஆர் எனர்ஜி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் ஆகியவை இணைந்த கூட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி அப்பிராந்தியத்தில் மின் சக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்ட மேம்பாடு, கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு விரிவான கட்டமைப்பை …
Read More »கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் முக்கிய திருத்தங்களை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது
உள்ளூர் கேபிள் சேவை வழங்குநர்களின் பதிவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைக்கான விதிகள் 1994-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, உள்ளூர் கேபிள் ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பதிவுகள் இந்த அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முற்றிலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். ஆதார், நிரந்தர கணக்கு எண், நிறுவன …
Read More »
Matribhumi Samachar Tamil