குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) புதுதில்லியில் 2025-ம் ஆண்டுக்கான புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து வரும் புத்தகங்களைப் படிப்பது, பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குகிறது. புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளையும், …
Read More »மகாத்மாவின் பயணம்: அவரின் சொந்த ஆவணங்களிலிருந்து
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தேசிய ஆவணக்காப்பகமும் தேசிய காந்தி அருங்காட்சியகமும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் மற்றும் பிரசார் பாரதி ஆவணக்காப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து “மகாத்மாவின் பயணம்: அவரின் சொந்த ஆவணங்களில் இருந்து” என்ற தலைப்பில் சிறப்புக் கண்காட்சியை அறிவித்துள்ளன. மகாத்மா காந்தியின் பேத்தியும், தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவருமான திருமதி தாரா காந்தி பட்டாச்சார்ஜி 2025, ஜனவரி 30 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு புதுதில்லி …
Read More »சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன் கீழ் முத்திரை சீட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு
சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை அது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் முறையே ஜனவரி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் உற்பத்தி தொடர்பான தரவுகளை வழங்குவதற்கும் கொள்முதல் குறித்த …
Read More »இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனையாகும்: டாக்டர் ஜிதேந்திர சிங்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் -02 மிஷன் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரோவால் பதிவு செய்யப்பட்ட அசாதாரண சாதனைகளால் …
Read More »எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் –எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான எத்தனால் விலையில் திருத்தம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து …
Read More »ஏழு ஆண்டுகளில் ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் “முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்திற்கு” மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் “முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை”த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் …
Read More »பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை …
Read More »வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து
வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார். இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், விண்வெளி ஆய்வில் நாடு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடக …
Read More »தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளகப்பயிற்சித் திட்டத்தை 2025 ஜனவரி 27 அன்று தொடங்கியது. மனித உரிமைகள், அது தொடர்பான சட்டங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த 80 இளங்கலை, முதுகலை மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித …
Read More »தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது
தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது. நேற்று (27.01.2025) தொடங்கிய இந்தப் பயிலரங்கு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கான இந்தப் பயிலரங்கு புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்தல், தொலை உணர்வு, புவிசார் வரைபட தகவல் முறை, உலகளாவிய நிலப்பகுதி வழிகாட்டுதல் செயற்கைக் கோள் நடைமுறைகள், ட்ரோன் மூலம் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தப் …
Read More »
Matribhumi Samachar Tamil