சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 22 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்கள …
Read More »சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது. முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …
Read More »பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு விழாவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடியது
பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் …
Read More »தேசிய சுகாதார இயக்கத்தின் (2021-24) சாதனைகள்: இந்தியாவின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்
மனித வளங்களை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல் போன்ற தொடர் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலம், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த …
Read More »2025-26-ம் ஆண்டு பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025-26 பருவத்திற்கு கச்சா சணலுக்கான (டிடி-3 தரம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு …
Read More »தேசிய சுகாதார இயக்கம் (2021-24) கீழ் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை மத்திய அமைச்சரவை மதிப்பீடு செய்தது: இது நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மைல்கல் ஆகும்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காலரா, டெங்கு, காசநோய், தொழுநோய், வைரஸ், மஞ்சள்காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு திட்டங்கள், தேசிய சிக்கல் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் போன்ற புதிய முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் …
Read More »பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (22.01.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு …
Read More »இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத் தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத்தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (2025 ஜனவரி 22) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமடைந்துள்ள சூழலில் இந்த அதிகாரிகள் பணியில் இணைவதாகக் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, விரைவான தகவல் பரவல், மாறும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றை …
Read More »பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22) நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் …
Read More »பழங்குடி சமூகங்களிடையே முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025
பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட …
Read More »
Matribhumi Samachar Tamil