गुरुवार, दिसंबर 12 2024 | 11:51:34 PM
Breaking News
Home / अन्य समाचार / வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

Follow us on:

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின்  செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிராந்திய ஆய்வுக் கூட்டம் 2024 நவம்பர் 12 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று துறையின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிக் குறித்து விவாதித்தனர். கூடுதல் செயலாளர் திரு வர்ஷா ஜோஷி மற்றும் ஆலோசகர் (புள்ளியியல்) திரு ஜகத் ஹசாரிகா உள்ளிட்ட துறையின் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய கால்நடை இயக்கம், தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தொழில்முனைவோர் மேம்பாடு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம்  உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களின் நேரடி மற்றும் நிதி சார்ந்த முன்னேற்றத்தை கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.

கோமாரி நோய், புருசெல்லோசிஸ், பிபிஆர் மற்றும் கிளாசிக்கல் பன்றிக் காய்ச்சல் போன்ற முக்கிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசியில் கவனம் செலுத்தும் மத்திய அரசின் முதன்மையான கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்  முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.   கன்றுகள், எருமைகள், செம்மறியாடு மற்றும் ஆடுகளுக்கு 6 மாதத்திற்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் நிலை குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …