गुरुवार, नवंबर 28 2024 | 09:03:52 PM
Breaking News
Home / Choose Language / Tamil / யுவ சங்கம் (ஐந்தாம் கட்டம்) பீகார்- கர்நாடகா மற்றும் ஆந்திரா – உத்தரபிரதேசம் இடையே இரண்டு சுற்றுப்பயணங்களுடன் தொடங்கியது

யுவ சங்கம் (ஐந்தாம் கட்டம்) பீகார்- கர்நாடகா மற்றும் ஆந்திரா – உத்தரபிரதேசம் இடையே இரண்டு சுற்றுப்பயணங்களுடன் தொடங்கியது

Follow us on:

2024, நவம்பர் 24 அன்று பீகாரில் இருந்து 44 பிரதிநிதிகள் கர்நாடகாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது யுவ சங்கம்  5-ம்  கட்டம் சிறப்புறத் தொடங்கியது. ஆந்திராவைச் சேர்ந்த 50 பிரதிநிதிகளைக் கொண்ட மற்றொரு குழு 2024,  நவம்பர் 25 அன்று உத்தரபிரதேசத்திற்கு தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட யுவ சங்கம், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களிடையே தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முதன்மை முயற்சியாகும். பங்கேற்பாளர்களில், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள், மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட/நேரு யுவகேந்திரா சங்கதன் தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளம் தொழில் வல்லுநர்கள் அடங்குவர். அந்தந்த மாநிலங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனங்களால் நடத்தப்படும் கவனமான நடைமுறையின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது ஒரு மாறுபட்ட மற்றும் பிரதிநிதித்துவ குழுவாக இருக்கும்.

யுவ சங்கத்தின் ஐந்தாம் கட்டத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள இருபது புகழ்பெற்ற நிறுவனங்கள் பல மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், முறையே மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில், தங்கள் இணை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

யுவ சங்க சுற்றுப்பயணங்களின் போது,  5 முதல் 7 நாட்கள் வரை (பயண நாட்கள் தவிர்த்து) வருகை தரும் குழுவினர் சுற்றுலா, பாரம்பரியம் , வளர்ச்சி, மக்களிடையேயான இணைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் அனுபவம் பெறுவார்கள்.  யுவ சங்கத்தின் முந்தைய கட்டங்களில் காணப்பட்ட உற்சாகத்தால் இந்தக்  கட்டத்தில் பதிவுகள் 44,000 -ஐ தாண்டியது. இதுவரை இந்தியா முழுவதும் 4,795 இளைஞர்கள் யுவ சங்கத்தின் பல்வேறு கட்டங்களில் 114 சுற்றுப்பயணங்களில் பங்கேற்றுள்ளனர் (2022  முன்னோட்டக் கட்டம் உட்பட).

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது: மத்திய அரசு

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் …