मंगलवार, दिसंबर 03 2024 | 01:25:00 AM
Breaking News
Home / Choose Language / Tamil / வெலிங்டனில் உள்ள ராணுவ சேவைகள் பணியாளர் கல்லூரி பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசுத் தலைவர் உரை

வெலிங்டனில் உள்ள ராணுவ சேவைகள் பணியாளர் கல்லூரி பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசுத் தலைவர் உரை

Follow us on:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 28, 2024) தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் நட்பு நாடுகளின் சாத்தியமான தலைவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அதிகாரிகளுக்கும் பயிற்சி மற்றும் கல்வி அளிப்பதில் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறினார். கடந்த ஏழு தசாப்தங்களாக, நடுத்தர நிலை அதிகாரிகளை தொழில்ரீதியாக தயார்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகித்துள்ளது. இது ஒரு கலப்பு பல்-சேவை மற்றும் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகள் குழு மற்றும் தொழில்முறை வளமான ஆசிரியர்களைக் கொண்ட தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது.

இந்திய ஆயுதப் படைகள் அனைவராலும் மதிக்கப்படுகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது நாட்டின் எல்லைகளையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். நமது தேசிய நலன்களை தொடர்ந்து பாதுகாத்து வரும் நமது பாதுகாப்புப் படைகள் குறித்து தேசம் எப்போதும் பெருமிதம் கொள்கிறது. எப்போதும் தேசம் முதலில் என்ற உணர்வுடன் பணியாற்றும் நமது பாதுகாப்புப் படையினர் உயர்ந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

முப்படைகளிலும் பல்வேறு பிரிவுகளுக்கு பெண் அதிகாரிகள் தற்போது தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றுவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வலிமை மற்றும் பங்களிப்பு அதிகரித்து வருவது அனைவருக்கும், குறிப்பாக இளம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். ஆயுதப் படைகளில் அதிக பெண்கள் சேருவதைக் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அங்கு அவர்கள் விதிவிலக்கான திறன்களை வெளிப்படுத்துவதோடு, அறியப்படாத பிரதேசங்களில் புதிய சாதனை படைக்க முடியும் என்றார்.

இந்தியா எழுச்சி பெற்று வருவதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது வளர்ச்சியை உலகம் அங்கீகரித்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வருங்கால சவால்களை எதிர்கொள்ள ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்க, இந்தியா உள்நாட்டுமயமாக்கல் மற்றும் சுயசார்பை நோக்கி நகர்ந்து வருகிறது. நமது நாடு ஒரு பெரிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது, மேலும் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாகவும், பெரிய பாதுகாப்பு ஏற்றுமதியாளராகவும் மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.

வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இணையப் போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற புதிய தேசிய பாதுகாப்பு சவால்களுக்கும் நாம் தயாராக வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினை புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது, அதைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க வேண்டும். தீவிர ஆராய்ச்சியின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட அறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த பாடநெறி பயிற்சி அதிகாரிகள் அனைவரையும் உயர் பொறுப்புகளுக்கும், சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட கையாளக்கூடிய  உத்திசார்ந்தவர்களாகவும் தயார்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் முழு உரை வருமாறு:

ராணுவ சேவைகள் பணியாளர் கல்லூரியின் கமாண்டன்ட், லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அவர்களே,

மூத்த அதிகாரிகளே, கல்லூரியின் பயிற்றுனர் குழுவினர்களே, பயிற்சி அதிகாரிகளே,

வணக்கம்,

  1. நாட்டின் சிறப்புமிக்க  முப்படைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் உங்களிடையே உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் சூழப்பட்ட இயற்கை எழில்மிகு நீலகிரி மலைகளுக்கு இடையே அமைந்துள்ள ராணுவப் பணியாளர் கல்லூரியின்  அழகை கண்டு வியந்துபோனேன்.

அன்பார்ந்த அதிகாரிகளே,

  1.  கடுமையான போட்டித் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அத்துடன், 26 நாடுகளில் இருந்து வந்து இங்கு பயிற்சி பெறும் 38 சர்வதேச பயிற்சி அதிகாரிகளையும் நான் வரவேற்கிறேன்.
  2. இளம் பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை கேட்கும் போது நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர்களது உறுதிபாடும், நாட்டிற்காக சேவையாற்றுவது என்ற உறுதியும் பாராட்டத்தக்கது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள உங்களில் சிலர் பெண் அதிகாரிகள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.  இந்தப் பயிற்சி வகுப்பில் இணையும் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை வருங்காலங்களில் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
  3. நமது ஆயுதப்படைகள் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பணியமர்த்தப்பட்டுள்ள பெண் அதிகாரிகளை சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெண் அதிகாரிகள் முப்படைகளிலும் தற்போது பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை ஏற்றுள்ளனர்.  இந்திய கடற்படையில் பெண் அதிகாரி ஒருவர் முன்னணிப் போர்க்கப்பலில் கட்டளை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இம்மாத தொடக்கத்தில் கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பயணித்த போது, இளம், துடிப்புமிக்க பெண் அக்னிவீர் மற்றும் பெண் மாலுமிகளை நான் சந்தித்தேன். அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள், குறிப்பாக இளம் பெண்களின் பங்களிப்பும், வலிமையும் அதிகரித்து வருவது நம் அனைவருக்கும் ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக உள்ளது. மேலும் பல பெண்கள் ஆயுதப்படைகளில் இணைவார்கள் என கருதுகிறேன், அங்கு அவர்கள் தனித்துவமான திறன் மற்றும் இதுவரை நுழையாத துறைகளிலும் சாதனை படைப்பார்கள்.  இந்திய வரலாற்று அத்தியாயங்களில் பெண் அதிகாரிகள் பொன்னான பங்களிப்பை வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பார்ந்த அதிகாரிகளே,

  1.  இந்தியா மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகளின்  ஆற்றல்மிக்க தலைவர்கள் மற்றும் சிவிலியன் அதிகாரிகளுக்கு பயிற்சியும், கல்வியும் அளிப்பது, ராணுவ சேவைகள் பணியாளர் கல்லூரி பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.  இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியத்தும் அளித்து தொடர்ச்சியான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். கடந்த 70 ஆண்டுகளில் இந்தப் பயிற்சி கல்லூரி, நடுத்தர நிலை அதிகாரிகளை தொழில் ரீதியாக வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.  மேலும் இக்கல்லூரி முப்படைகள்  மற்றும் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகள் மற்றும் தொழில் ரீதியாக திறன்மிக்க ஆசிரியர்களை கொண்ட தனித்துவமான கல்லூரியாக திகழ்கிறது.
  2. அதிகாரிகளுக்கு தரமான பயிற்சி அளிப்பதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் இக்கல்லூரி முன்னிலையில் உள்ளது, மேலும்  உலகம் முழுவதிலும் உள்ள இதேபோன்ற பயிற்சி நிறுவனங்களில் கிடைக்கும் சிறந்த பயிற்சிகளுக்கு இணையாகவும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த கல்லூரியில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சிர்கள், நமது ஆயுதப்படைகளிலும், நாட்டின் பிற உயர் பொறுப்புகளையும் வகித்துள்ளனர்.
  3.  இந்திய ஆயுதப்படைகள் அனைவராலும் மதிக்கப்படுகின்றன. நம்நாட்டின் எல்லைகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். நமது நாட்டின் நலன்களை தொடர்ந்து பாதுகாப்பதில் நமது பாதுகாப்பு படைகளின்  பங்களிப்பால் நாடு பெருமிதம் அடைகிறது.  நமது பாதுகாப்பு படையினர் எப்போதும் தேசம் முதலில் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.  இது மிகுந்த பாராட்டுக்குரியது.  தங்களது அன்புக்குரியவர்களை நாட்டிற்காக கடமையாற்ற அனுப்பிவைக்கும் வீரர்களின் குடும்பத்தினரின் பங்களிப்பையும் நான் போற்றுவதோடு, அவர்கள் நாட்டிற்காக ஆற்றி வரும் பணிகளும் பெருமிதம் அடைய வைக்கிறது.

அன்பார்ந்த அதிகாரிகளே,

  1.  இந்தியா எழுச்சியடைந்து வருவதோடு, பாதுகாப்பு துறை உட்பட பல்வேறு துறைகளிலும் நமது வளர்ச்சியை உலகம் அங்கீகரித்து வருகிறது. எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கேற்ப, நமது ஆயுதப்படைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க உள்நாட்டு மயமாக்கல் மற்றும் தற்சார்பை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நம் நாடு மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாகவும் உருவெடுத்து வருவதோடு, நம்பகமான ராணுவ பங்குதாரர் மற்றும் மிகப்பெரிய ராணுவ தளவாட ஏற்றுமதியாளராகவும் மாறிவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை நவீன தொழில்நுட்பங்களை விரைவாகப் பின்பற்றுவதோடு, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு கொள்கையை நோக்கி முன்னேறி வருகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) போன்ற நமது பாதுகாப்பு துறை நிறுவனங்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன. தற்போது இந்தியா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 30 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் பெரும் பங்கு வகித்துள்ளது.
  2. வேகமாக மாறிவரும் புவி அரசியல் சூழலில், எத்தகைய நிலைமையையும் சமாளிக்க நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.  புவி அரசியல் இயக்கவியல் பாதுகாப்பு சூழலை மாற்றியிருப்பதால், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களை ஆழமாக  அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நம்நாட்டு நலன்களை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, இணையப் போர்முறைகள் மற்றும் தீவிரவாதம் போன்ற  புதிய தேசிய பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், அதனை உணர்ந்து அதை சமாளிக்க வேண்டியது அவசியம். கடுமையான ஆராய்ச்சியின் அடிப்படையிலான, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் மற்றும் துல்லிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அவசியம். நமது ஆயுதப்படை அதிகாரிகள் எதிர்கால சவால்களை எளிதில் சமாளிப்பார்கள் என நான் நம்புகிறேன். இந்தப் பயிற்சி வகுப்பு உங்கள் அனைவரையும் உயர் பொறுப்புகளுக்கும், சிறந்த உத்தி வகுப்பவர்களாகவும் தயார்படுத்தும் என்பதால் எத்தகைய சிக்கலான சூழலையும் திறம்பட்ட முறையில் உங்களால் சமாளிக்க முடியும்.
  3. தற்போது நட்புநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இங்குள்ளனர். இந்தியாவிடமிருந்து ஒரு செய்தியை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா எப்போதும் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற தத்துவத்தை பின்பற்றி வருவதோடு ஒட்டுமொத்த உலகையும் தனது நண்பர் மற்றும் குடும்பமாகவே கருதுகிறது. இந்தியா எப்போதும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்து வருகிறது. வெளிநாட்டு பயிற்சி அதிகாரிகள் அனைவருக்கும்  மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
  4. நிறைவாக, இந்த கல்லூரியின் அனைத்து அதிகாரிகள், ஆசிரியர்கள்  மற்றும் ஊழியர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வளமான எதிர்காலம் மற்றும் தலைசிறந்த பணி வாய்ப்புக்கு எனது நல்வாழ்த்துகள்!

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ்  பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது.  டிஜிட்டல் ஆயுள் …