सोमवार, दिसंबर 23 2024 | 12:39:30 AM
Breaking News
Home / Matribhumi Samachar (page 118)

ब्रिटिश समाचार पत्र ने किया सोशल मीडिया प्लेटफॉर्म एक्स का किया बायकाट

लंदन. टेस्ला और सोशल मीडिया प्लेटफार्म X के मालिक एलन मस्क इन दिनों खबरों में बने हुए है. डोनाल्ड ट्रंप ने उन्हें अपने कैबिनेट में जगह दी हैं. वही, अब उन्हें एक बड़ा झटका बजी लगा है. ब्रिटिश न्यूज  पेपर द गार्जियन ने सोशल मीडिया प्लेटफॉर्म  X का इस्तेमाल न करने …

Read More »

थप्पड़ कांड वाला निर्दलीय प्रत्याशी नरेश मीणा फरार होने के बाद फिर आया सामने

जयपुर. राजस्थान में उपचुनाव के बीच देवली उनियारा विधानसभा सीट पर निर्दलीय प्रत्याशी नरेश मीणा के ‘थप्पड़ कांड‘ की गूंज ने जमकर बवाल किया। बीती देर रात निर्दलीय प्रत्याशी नरेश मीणा के समर्थकों के उपद्रव पर टोंक पुलिस को हवाई फायरिंग और लाठी चार्ज करना पड़ा। पुलिस ने सख्ती बरतते …

Read More »

சுரங்க அமைச்சகம் சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த பயிலரங்கை நடத்தியது

சுரங்க அமைச்சகம், சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த பயிலரங்கை இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் கலந்து கொண்டார். சுரங்க அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சர்வதேச எரிசக்தி முகமை, சிந்தனையாளர்கள், தொழில்துறை சங்கங்கள், மறுசுழற்சி தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர். இப்பயிலரங்கில் பேசிய அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ், நாட்டின் எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமான கனிம மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தூய்மையான எரிசக்தியில் திட்டமிட்ட வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். முக்கியமான கனிமங்கள் மீதான இந்தியாவின் கவனம் அதன் எரிசக்தி லட்சியங்கள், தொழில்துறை தேவைகள் மற்றும் பருவநிலை இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். முக்கியமான கனிமங்களின் மறுசுழற்சி இந்த தாதுக்களின் உள்நாட்டில் கிடைக்கும் அளவை அதிகரிக்கும் என்றும் இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பயிலரங்கின் போது, உலகளாவிய வளர்ந்து வரும் மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், முக்கியமான கனிமங்கள் மறுசுழற்சி வணிக மாதிரிகள் மற்றும் மறுசுழற்சி தொழிலை ஆதரிப்பதற்கான கொள்கை சீரமைப்பின் தேவை ஆகியவற்றின் முக்கிய பகுதிகள் குறித்த குழு விவாத அமர்வுகள் தொழில்துறை, ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிபுணர்களால் நடத்தப்பட்டன. முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த வரவிருக்கும் அறிக்கை குறித்து சர்வதேச எரிசக்தி முகமையின் எரிசக்தி கனிம பகுப்பாய்வுத் தலைவர் திரு டே-யூன் கிம் ஒரு விளக்கக் காட்சியையும் வழங்கினார்.

Read More »

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 15 படங்கள் தங்க மயில் விருதுக்குப் போட்டியிடுகின்றன

உலகெங்கிலும் உள்ள சக்திவாய்ந்த கதைசொல்லலைக் காண்பிக்கும் 15 திரைப்படங்கள், 55 வது சர்வதேச திரைப்பட விழா 2024-ல் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு (கோல்டன் பீக்காக்) போட்டியிட உள்ளன. இந்த ஆண்டு இதில்  12 சர்வதேச படங்களும், 3 இந்திய படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கலைத்திறனுக்காக போட்டியிடுகின்றன. புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் அசுதோஷ் கோவரிகர் தலைமையிலான மதிப்புமிக்க தங்க மயில் நடுவர் குழுவில் விருது பெற்ற சிங்கப்பூர் இயக்குநர் அந்தோனி சென், பிரிட்டிஷ்-அமெரிக்க தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சன், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் ஃபிரான் போர்ஜியா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட கலைஞர் ஜில் பில்காக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பு பரிசு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களை இந்த நடுவர் குழு தீர்மானிக்கும். வெற்றி பெறும் படத்திற்கு ரூ. 40 லட்சம் பரிசும் விழாவின் உயர் கௌரவமும் வழங்கப்படும். 1. ஃபியர் அண்ட் ட்ரெம்பிளிங் (ஈரான்) 2. குலிசார் (துருக்கி) 3. ஹோலி கவ் (பிரான்ஸ்) 4. ஐஆம் நெவென்கா (ஸ்பெயின்) 5. பானோப்டிகான் (ஜார்ஜியா-அமெரிக்கா) 6. பியர்ஸ் (சிங்கப்பூர்) 7. ரெட் பாத் (துனிசியா) 8. ஷெஃபர்ட்ஸ் (கனடா-பிரான்ஸ்) 9. தி நியூ இயர் தட் நெவர் கம் (ருமேனியா) 10. டாக்சிக் (லிதுவேனியா) 11. வேவ்ஸ் (செக் குடியரசு) 12. ஹூ டூ ஐ ஆம் பிலாங் டூ (துனிசியா-கனடா) 13. தி கோட் லைஃப் (இந்தியா) 14. ஆர்ட்டிகிள் 370 (இந்தியா) 15. ராவ்சாஹேப் (இந்தியா)  ஆகிய 15 படங்கள் விருதுக்கு போட்டியிடுகின்றன.15 படங்களில் 9  படங்கள் பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை.

Read More »

உலக நீரிழிவு தினம் 2024

உலக நீரிழிவு தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது.  இது நீரிழிவு நோய் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக செயல்படுகிறது. இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாகும். இதன் மூலம் நீரிழிவு தடுப்பு, ஆரம்பகால நோய் கண்டறிதல், பயனுள்ள மேலாண்மை மற்றும் சமமான பராமரிப்பு அணுகல் ஆகியவற்றில் விரிவான நடவடிக்கைகளின் அவசர தேவையை எடுத்துக்காட்டுகிறது. 2024-ம் ஆண்டில், “தடைகளை உடைத்தல், இடைவெளிகளைக் குறைத்தல்” என்ற கருப்பொருள் சுகாதாரப் பராமரிப்பில் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. நீரிழிவு பராமரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய அரசுகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடையே ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. நீரிழிவு என்பது கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி அல்லது இன்சுலின் திறம்பட பயன்படுத்த உடலின் இயலாமையின் விளைவாக ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலையாகும். இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் அவசியம், சரியான இன்சுலின் செயல்பாடு இல்லாமல், இரத்த சர்க்கரை கட்டுப்பாடின்றி உயரக்கூடும், இது ஹைப்பர் கிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற நீரிழிவு, குறிப்பாக காலப்போக்கில், பல்வேறு உடல் அமைப்புகளை, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். 2023-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்  இந்தியா நீரிழிவு ஆய்வின்படி, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.1 கோடி ஆகும். நீரிழிவு நோயின் அறிகுறிகள் நீரிழிவு அறிகுறிகள் திடீரென்று தோன்றக்கூடும், இருப்பினும் வகை 2 நீரிழிவு நோயில், அவை படிப்படியாக உருவாகலாம். சில நேரங்களில் அதை உணர  பல ஆண்டுகள் ஆகும். அதிகரித்த தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, சோர்வு மற்றும் எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளில் அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீரிழிவு இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில சந்தர்ப்பங்களில், சேதமடைந்த விழித்திரை இரத்த நாளங்கள் காரணமாக நிரந்தர பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்தை எழுப்புகிறது. நீரிழிவு நரம்பு பாதிப்பு மற்றும் கால்களில் மோசமான சுழற்சிக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக புண்கள் மற்றும் ஊனமும் ஏற்படலாம். நீரிழிவு நோயை எவ்வாறு தடுப்பது? வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ள வழியாகும். ஆரோக்கியமான எடையை பராமரித்தல், தினமும் குறைந்தது 30 நிமிட மிதமான உடற்பயிற்சியுடன் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். குறைவான சர்க்கரை மற்றும் கொழுப்புகளைக் கொண்ட சீரான உணவைப் பின்பற்றுதல் மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பது ஆகியவை தடுப்புக்கான பரிந்துரைகளில் அடங்கும். செயலூக்கமான வாழ்க்கை முறை மேலாண்மை மூலம், தனிநபர்கள் வகை 2 நீரிழிவு மற்றும் அது தொடர்பான சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

Read More »

வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின்  செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தலைமையில் வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிராந்திய ஆய்வுக் கூட்டம் 2024 நவம்பர் 12 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் …

Read More »

நான்காவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சியான ‘சீ விஜில்-24’ ஐ இந்திய கடற்படை நடத்தவுள்ளது

இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான ‘சீ விஜில்-24,  என்ற கடல் கண்காணிப்பு-24 பயிற்சியை  ‘நவம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உள்ளது. 06 அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகளின் பங்கேற்புடன் இப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, மீன்வளத்துறை போன்றவற்றின் பணியாளர்களுடன், இந்திய கடற்படை தலைமையிலான குழுக்களின் ஒரு பகுதியாக பங்கேற்பார்கள். துறைமுகங்கள், எண்ணெய் கிணறுகள், கடலோர மக்கள் உள்ளிட்ட முக்கிய கடலோர உள்கட்டமைப்பு போன்ற கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த பயிற்சி கவனம் செலுத்தும். இந்த ஆண்டு பிற சேவைகளின் …

Read More »

விண்வெளிப் போர் சூழலில் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு விண்வெளி முகமை, முதலாவது ‘அந்தரிக்ஷா அபியாஸ் – 2024’ நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது

பாதுகாப்பு விண்வெளி முகமை 2024 நவம்பர் 11 முதல் 13 வரை ஸ்பேஸ் டேபிள் டாப் பயிற்சியான அந்தரிக்ஷா அபியாஸ்-2024  என்ற பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது. இது விண்வெளிப் போர்க் களத்தில் இந்திய ஆயுதப் படைகளின் உத்திசார்  தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் பயிற்சியாகும். இந்த முன்னோடி நிகழ்வு இந்தியாவின் விண்வெளி அடிப்படையிலான செயல்பாட்டு திறன்களை வலுப்படுத்துவதிலும், விண்வெளி பாதுகாப்பிற்கான முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான படியாகும். இந்த பயிற்சியின் முக்கிய அம்சங்களில் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பங்கள், விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு, இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. முக்கியமான சொத்துக்களை கண்காணித்தல், பாதுகாத்தல், அதிகரித்து வரும் போட்டி விண்வெளி சூழலில் விழிப்புணர்வை பராமரிப்பதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இதில் விவாதங்கள் நடைபெற்றன. மூன்று நாள் நிகழ்வில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்றனர். மேலும் ராணுவம், அறிவியல் வல்லுநர்கள்,  கல்வியாளர்கள் ஆகியோர் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினர். பாதுகாப்பு விண்வெளி நடவடிக்கைகளில் உள்ள சவால்கள், விண்வெளி பாதுகாப்பு, சர்வதேச விண்வெளி சட்டங்களின் தன்மை ஆகியவற்றை அவர்கள் தெளிவுபடுத்தினர்.

Read More »

“பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கு” மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயிற்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களின் சிக்கலைத் தீர்க்க விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ‘பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024’, பயிற்சி மையங்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஏமாற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளிலிருந்து மாணவர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிசிபிஏ தலைமை ஆணையரும் இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளருமான …

Read More »

தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25-வது கூட்டத்தை டிராய் நடத்தியது

தெற்காசிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் கவுன்சிலின் (SATRC-25- எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டம் புது தில்லியில் 2024 நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது. தெற்காசியா முழுவதிலுமிருந்து கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) உடன் இணைந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நடத்திய இந்த ஆண்டு கூட்டம், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்வதிலும், உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல் அமைப்பை நோக்கிய பாதைகளை உருவாக்குவதிலும் கவனம் …

Read More »