பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இளம் மாணவர்களுடன் இன்று (23.01.2025) கலந்துரையாடினார். 2047-ம் ஆண்டுக்குள் தேசத்தின் இலக்கு என்ன என்று பிரதமர் மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவது என்று பதிலளித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் என்ற எல்லை ஏன் என்று …
Read More »இந்திய விளையாட்டு ஆணையம், 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை சென்னையில் நடத்துகிறது
மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகளை நடத்தவுள்ளது. 12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு …
Read More »தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி ஆலோசனை: மாநிலத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) …
Read More »போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புக் கண்காட்சி
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 22 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்கள …
Read More »சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள நிப்மெட் நிறுவனத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD- நிப்மெட்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 21.01.2025 அன்று ஆய்வு மேற்கொண்டது. முட்டுக்காடு நிப்மெட் இயக்குநர் டாக்டர் நச்சிகேதா ரவுட், இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் சேவை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பேருந்து சேவை நடைமுறைகள், ஹைட்ரோ தெரபி சிகிச்சை முறைகள் குறித்து …
Read More »பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு விழாவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாடியது
பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முன்னோடி திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இன்று கொண்டாடியது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி, பெண்கள் மற்றும் …
Read More »தேசிய சுகாதார இயக்கத்தின் (2021-24) சாதனைகள்: இந்தியாவின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்
மனித வளங்களை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல் போன்ற தொடர் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலம், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த …
Read More »2025-26-ம் ஆண்டு பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்திற்கான கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2025-26 பருவத்திற்கு கச்சா சணலுக்கான (டிடி-3 தரம்) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சராசரி உற்பத்திச் செலவை விட 66.8 சதவீத வருவாயை உறுதி செய்யும். 2018-19 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு …
Read More »தேசிய சுகாதார இயக்கம் (2021-24) கீழ் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை மத்திய அமைச்சரவை மதிப்பீடு செய்தது: இது நாட்டின் பொது சுகாதார மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மைல்கல் ஆகும்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில், காலரா, டெங்கு, காசநோய், தொழுநோய், வைரஸ், மஞ்சள்காமாலை போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு திட்டங்கள், தேசிய சிக்கல் செல் இரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கம் போன்ற புதிய முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் …
Read More »பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (22.01.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு …
Read More »
Matribhumi Samachar Tamil