Sunday, March 29 2026 | 11:43:11 AM
Breaking News

Matribhumi Samachar

இந்திய பாதுகாப்புக் கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத் தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி மற்றும் இந்திய தொலைத்தொடர்புப் பணி பயிற்சி அதிகாரிகள் குழு இன்று (2025 ஜனவரி 22) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் வேகமடைந்துள்ள சூழலில் இந்த அதிகாரிகள் பணியில் இணைவதாகக் கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, விரைவான தகவல் பரவல், மாறும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றை …

Read More »

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது. இது நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல், கல்வி கற்பித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கான ஒரு பத்தாண்டுக்கால இடைவிடாத முயற்சிகளைக் குறிக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜனவரி 22)  நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜே.பி.நட்டா, மத்திய மகளிர் மற்றும் …

Read More »

பழங்குடி சமூகங்களிடையே முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, தேசிய பழங்குடியினர் சுகாதார மாநாடு 2025-ஐ புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 20 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாக  இந்த மாநாடு அமைந்திருந்தது. இது தார்த்தி ஆபா பழங்குடி கிராம வளர்ச்சி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட …

Read More »

விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இது 44 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – டாக்டர் ஜிதேந்திர சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சன்சாத் தொலைக்காட்சியில் இந்தியாவின் உயிரி மருந்து, விண்வெளித் துறைகள் மற்றும் ஆளுகை, பருவநிலை நடவடிக்கைகளில் நாட்டின் முன்னேற்றம் குறித்த பிரத்யேக நிகழ்ச்சியின் போது மாநிலங்களவை உறுப்பினர் திரு விஜய் தங்காவுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை  எடுத்துரைத்த அமைச்சர் இந்தத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அனுமதித்த சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி …

Read More »

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2025 ஜனவரி 23 அன்று ஷில்லாங்கில் கால்நடை மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது 2025 ஜனவரி 23-24 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் “வடகிழக்கு இந்தியாவில் கால்நடைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான உரையாடல்” என்ற கருப்பொருளில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடைப் …

Read More »

செல்வமகள் சேமிப்புத் திட்டம்

செல்வமகள் சேமிப்புத் திட்டம்  நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரமளித்தலின் அம்சமாகத் திகழ்கிறது. இது அவர்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 2025 ஜனவரி 22  செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் 10 ஆண்டுகள் …

Read More »

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்த தினத்தையொட்டி அவரது மரபுகளை கௌரவிக்கும் வகையில் பராக்கிரம தினம் 2025-ஐ இந்தியா கொண்டாடுகிறது

பராக்கிரம தினம் 2025-யையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான வரலாற்று நகரம் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 முதல் 25 வரை  பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பன்முக கொண்டாட்டம் நேதாஜியின் 128-வது பிறந்த நாளையொட்டி அவரது பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வை ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி 23.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார். நேதாஜியின் பிறந்த தினத்தை ‘பராக்கிரம தினம்’ என்று நினைவுகூர அரசு 2022 இல் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆண்டு …

Read More »

ஸ்பெக்ட்ரம் குறித்த பயிலரங்கத்தை டிராய் தலைவர் தொடங்கி வைத்தார்

தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) குறித்த பயிலரங்கை டிராய் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் பயிலரங்கில் தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பணிக்குழு உறுப்பினர்கள், தொழில்துறை வல்லுநர்கள், பல அரசுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆசியா பசிபிக் தொலைத் தொடர்பு சமுதாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கை …

Read More »

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் பெல்ஜியம் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

இந்தியா- பெல்ஜியம் இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பெல்ஜியம் வெளியுறவு, ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் வெளியுறவு வர்த்தகத் துறை அமைச்சர் திரு. பெர்னார்ட் குயின்டினை பிரஸ்ஸல்ஸில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை ஆகிய பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா – பெல்ஜியம் இடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதன் தேவை வலியுறுத்தப்பட்டது.  …

Read More »

அமிர்த உத்யான் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது

குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த உத்யான் என்னும் பூந்தோட்டம் 2025 பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். பிப்ரவரி 5 (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20 மற்றும் 21 (ராஷ்டிரபதி பவனில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக), …

Read More »