Saturday, February 28 2026 | 09:56:47 AM
Breaking News

International

குவைத்தில் 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியைச் சந்திப்பதை பிரதமர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இன்று குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான திரு மங்கள் சைன் ஹந்தா ஜியை, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடலின் போது சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் பதிலளித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில்  திரு மங்கள் சைன் ஹந்தா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

Read More »

குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த  இதயபூர்வமான வரவேற்பு குறித்து  பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். குவைத்தில் இன்று பிற்பகலில் பிரதமர் திரு நரேந்திர மோடிதிரு  மங்கள் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டுள்ளதாவது: “குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்களிடம் இருந்து இதயபூர்வமான வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நன்றி .  “இன்று மதியம் குவைத்தில் திரு மங்கல் சைன் ஹந்தா ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பையும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது ஆர்வத்தையும் நான் பாராட்டுகிறேன்’’.

Read More »

குவைத்தில் தொழிலாளர் முகாமைப் பிரதமர் பார்வையிட்டார்

குவைத் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் சுமார் 1500 இந்தியர்கள் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் நல்வாழ்வு குறித்துக் கேட்டறிந்தார். வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்குப் பிரதமர் அளிக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமாக இந்த தொழிலாளர் முகாமுக்கு அவரது வருகை அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக இ-மைக்ரேட் தளம், மதாத் தளம், மேம்படுத்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புத் திட்டம் (பிரவாசி பாரதிய பீமா யோஜனா) போன்ற பல தொழில்நுட்ப அடிப்படையிலான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

Read More »

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.”

Read More »

நாடாளுமன்றக் கேள்வி: அதிகரித்து வரும் புவி வெப்பநிலை

அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து  மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. புவியின் நீண்டகால சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குக் கீழ் பராமரிக்கும் வகையில் வரும் 2050 ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு(ஐபிசிசி) தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு …

Read More »

இந்தியாவுக்கான பயணத்தை ஐ.என்.எஸ். துஷில் தொடங்கியது

அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட  பன்னோக்கு  ஏவுகணை போர்க்கப்பலான ஐ.என்.எஸ் துஷில், ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து இந்தியாவுக்கு 2024 டிசம்பர் 17 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு, 2024 டிசம்பர் 9-ம் தேதி அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் பால்டிக், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல், வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து,  பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்தியா வந்து சேரும். ஐ.என்.எஸ் துஷில் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ராஜதந்திரமிக்க நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உள்ளது. இந்தப் போர்க்கப்பல் கடற்கொள்ளைகளைத் தடுப்பது,  முக்கிய கடற்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, கடல்சார் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

Read More »

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா, இங்கிலாந்து இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். காமன்வெல்த் நாடுகள், சமோவாவில் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பருவநிலை நடவடிக்கை, நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல அம்சங்கள் குறித்தும் விவாதித்தனர். இவற்றில் மன்னரின் நீடித்த ஆதரவு மற்றும் முன்முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை வாழ்த்துகளை பரஸ்பரம் இருவரும் பரிமாறிக் கொண்டனர். மன்னரின் சிறந்த ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Read More »

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஷூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்

நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன்  தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டு பேசினார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நம்பிக்கை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை ஆகியவற்றை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தண்ணீர், வேளாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, புதுமை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மையை அதிகரிக்கவும், உத்திசார்ந்த பரிமாணத்தை வழங்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.  கல்வி, கலாச்சாரத் துறைகளில் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள், பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதிபூண்டனர்.  இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

Read More »

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன்  இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்  தளத்தில்  அவர் பதிவிட்டிருப்பதாவது: “மயோட்டேவில் சிடோ புயலால் ஏற்பட்ட …

Read More »

இலங்கை – இந்தியா கடற்டை கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது

இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி டிசம்பர் 17 முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும். இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் …

Read More »