Thursday, December 19 2024 | 05:23:27 AM
Breaking News

International

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தப் பயணம் தில்லியில் நிறைவடைந்தது

இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான 3 நாள் பேச்சுவார்த்தை பயணம் 2024 டிசம்பர் 6 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. 2024  டிசம்பர் 4 முதல் 6 வரை நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்திய தூதுக்குழுவுக்கு வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான திரு. ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவுக்கு வெளியுறவு …

Read More »

ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய – ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் 21-வது கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்கிறார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 டிசம்பர் 08 முதல் 10ம் தேதி வரை ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சரும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு ஆண்ட்ரே பெலோசோவ்-வும் டிசம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (IRIGC-M&MTC) 21- வது கூட்டத்திற்கு இணைத் தலைமை வகிப்பார்கள். இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக …

Read More »

இந்தியா – நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டம்: மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் நாளை பங்கேற்கிறார்

மத்திய வர்த்தகம் – தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை (2024 டிசம்பர் 08 -ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடைபெறவுள்ள இந்தியா-நார்வே வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  இதில் இந்தியாவுக்கான நார்வே தூதர் திருமதி மே-எலின் ஸ்டெனர் தலைமையிலான நார்வே தொழில்துறை தூதுக்குழுவுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவுக்கும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (இஎஃப்டிஏ) நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த விவாதத்தின் போது …

Read More »

வடக்கு அரபிக் கடலில் தத்தளித்த 12 மாலுமிகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்

இந்திய கடலோர காவல்படை 2024  டிசம்பர் 04 அதிகாலையில் வடக்கு அரேபிய கடலில் மூழ்கிய இந்திய கப்பல் எம்எஸ்வி அல் பிரன்பிரிலிருந்து 12 பணியாளர்களை மீட்டது. இந்த மனிதாபிமான தேடல் மற்றும் மீட்பு பணி இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பால் சாத்தியமானது. இரு நாடுகளின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் தங்களின் நடவடிக்கை முழுவதும் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளை பராமரித்தன. ஈரானின் போர்பந்தரில் இருந்து புறப்பட்ட அல் …

Read More »

நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்களின் தாங்குதிறனை வலுப்படுத்த சர்வதேச ஆலோசனை அமைப்பு

நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்கள் உலகளாவிய தகவல்தொடர்புகளின் முதுகெலும்பாகும். இது சுமார் 99% இணைய போக்குவரத்தைக் கொண்டுள்ளது. வர்த்தகம், நிதி, அரசு நடவடிக்கைகள், டிஜிட்டல் சுகாதாரம், கல்வி போன்ற முக்கியமான சேவைகளை வலுப்படுத்த இது உதவுகிறது. இந்த கேபிள்கள் சேதமடையக் கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 150 முதல் 200 வரை பிழைகள் நிகழ்கின்றன. மீன்பிடித்தல், நங்கூரமிடுதல், இயற்கை அபாயங்கள், உபகரணங்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கேபிள்களுக்கு சேதம் ஏற்படுகிறது. வளர்ந்து …

Read More »

மாஸ்கோவில் நடைபெற்ற விடிபி ரஷ்ய அழைப்பின் முதலீட்டு மன்றத்தில் பிரதமர் மோடியின் ” முதலில் இந்தியா” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்”  முன்முயற்சி ஆகியவற்றை அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” …

Read More »

பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார். வளர்ச்சியில் ஒத்துழைப்பு, தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, விண்வெளி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான …

Read More »