நாட்டின் தோட்டக்கலை விளைபொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பஞ்சாப் மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, ஜூன் 23-ம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட்டிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு ஒரு மெட்ரிக் டன் ரோஜா வாசனையுடன் கூடிய லிச்சிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
Read More »ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் குற்றமே, நியாயப்படுத்த முடியாதது; கூட்டு பாதுகாப்புக்காக தீவிரவாத அச்சுறுத்தலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் …
Read More »ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் …
Read More »இந்திய கடற்படையானது தமல் கப்பலை பணியில் இணைக்க உள்ளது
இந்திய கடற்படை, அதன் சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, 2025 ஜூலை 01 அன்று ரஷ்யாவின் கலினின்கிராட்டில், ரஷ்யாவிடம் இருந்து பெற்று, அதை செயல்படுத்திப் பணியில் இணைக்க உள்ளது. இந்த விழாவில் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். “தமல்” என்று பெயரிடப்பட்ட இது, கடந்த இருபது …
Read More »கென்யா, மடகாஸ்கர் நாடுகளுக்குப் பாதுகாப்பு இணையமைச்சர் நாளை முதல் 3 நாட்கள் பயணம்
பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையிலான இந்தியக் குழு நாளை முதல் (2025 ஜூன் 23) 26-ம் தேதி வரை 3 நாட்கள் கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் கட்டமாக இந்தியா, கென்யா நாடுகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் போர் நினைவுச்சின்னத்தை தைட்டா-டவேட்டா பகுதியில் கூட்டாகத் திறந்து வைப்பதற்காக நாளை (2025 ஜூன் 23) பாதுகாப்பு இணையமைச்சர் கென்யாவுக்குச் செல்கிறார். …
Read More »இந்தியா – குரோஷியா தலைவர்களின் அறிக்கை
குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து குரோஷியா பிரதமர் பிளென்கோவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தனர். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றிய நெருக்கமான, நட்புறவுகளை இந்தியாவும் குரோஷியாவும் கொண்டுள்ளன என்பதை …
Read More »குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். நண்பர்களே, இந்தியாவும் குரோஷியாவும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்மைத்துவம் …
Read More »லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்
லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …
Read More »சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …
Read More »இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்
1. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் …
Read More »
Matribhumi Samachar Tamil