Sunday, January 18 2026 | 03:07:57 AM
Breaking News

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்திற்குச் சென்றார்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்திற்குச் சென்றார். உள்துறை அமைச்சர் படையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, சிஆர்பிஎஃப்-பின் செயல்பாடுகள், நிர்வாக செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு செய்தார். மத்திய உள்துறை செயலாளர் உட்பட உள்துறை அமைச்சகத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குநர் திரு அனிஷ் தயாள் …

Read More »

மலேரியா ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் -மலேரியா இல்லாத நிலையை நோக்கிய பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது

மலேரியா இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் கதையாகும். 1947-ல் சுதந்திரத்தின் போது, மலேரியா மிகவும் முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டுதோறும் 7.5 கோடி பேர் பாதுக்காப்பட்டு 800,000 இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டு, இடைவிடாத முயற்சிகள் இந்த எண்ணிக்கையை 97% க்கும் அதிகமாக வெகுவாகக் குறைத்துள்ளன. பாதிப்பு வெறும் 20 லட்சமாகவும், மலேரியா இறப்புகள் 2203-ம் ஆண்டில் வெறும் 83 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வரலாற்று சாதனை, மலேரியாவை ஒழிப்பதிலும், மக்களுக்கு …

Read More »

ராஷ்ட்ரபர்வ் இணையதளம், கைபேசி செயலி- பாதுகாப்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவுகூரும் ‘நல்லாட்சி தினத்தை’ முன்னிட்டு 2024 டிசம்பர் 25 அன்று பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மொபைல் செயலியுடன் ராஷ்டிரபர்வ் (Rashtraparv)/என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். குடியரசு தினம், படைகள் பாசறை திரும்பும் விழா, சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நேரடி ஒளிபரப்பு, அனுமதிச் சீட்டு வாங்குதல், இருக்கை ஏற்பாடுகள், நிகழ்வுகளின் வழித்தட வரைபடங்கள் தொடர்பான தகவல்களை வழங்க இந்த வலைத்தளம் உதவும். …

Read More »

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதிதாக நிறுவப்பட்ட 10,000 கூட்டுறவு சங்கங்களை தொடங்கி வைத்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய கூட்டுறவு இணை அமைச்சர்கள் திரு கிரிஷன் பால், திரு முரளிதர் மொஹால், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். …

Read More »

புத்தொழில்களின் தேசம் இந்தியா – உலகளாவிய தொழில்முனைவின் எதிர்கால மையம்

உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் …

Read More »

பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் மக்களவைத் தலைவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

சம்விதான் சதன் மைய மண்டபத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். மத்திய சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு …

Read More »

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “மகாமன  பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். தீவிர சுதந்திரப் போராட்ட வீரராக இருந்ததுடன், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் முன்னோடியாக இருந்தார். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக …

Read More »

திரு அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளான இன்று, நமது நாட்டிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களை பதிவிட்டுள்ளேன்: பிரதமர்

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி தாம் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது: “இன்று, அடல் அவர்களின் 100-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பு குறித்தும், அவரது முயற்சிகள் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பது குறித்தும் சில எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன்.”   भारत …

Read More »

புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். ‘சுபோஷித் கிராம பஞ்சாயத்து இயக்கம்” என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை வலுப்படுத்துவதன் மூலமும், செயலூக்கம் நிறைந்த சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் …

Read More »

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக …

Read More »