Wednesday, March 18 2026 | 01:16:04 PM
Breaking News

லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர் மிஸ்ரா தலைமை தாங்கினார்

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் லோதலில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்தத் திட்டங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத்-தோலேரா பசுமைவழி விரைவுச் சாலையை டாக்டர் மிஸ்ரா பார்வையிட்டார். அகமதாபாத் – தோலேரா இடையேயான …

Read More »

சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர்  திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …

Read More »

இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்

1.  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் …

Read More »

இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்

பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில்  சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில்  பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் …

Read More »

தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி: சிஹ்சி மருந்தகம் சென்னைவாசிகளுக்கான இரண்டாவது இலவச மருத்துவ முகாமுடன் ‘மக்களுக்கு முன்னுரிமை சுகாதாரம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

சென்னை, ஜூன் 15. சென்னையின் முன்னணி – சிஹ்சி மருந்தகம், தந்தையர் தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அதன் வளசரவாக்கம் கிளையில் இலவச மருத்துவ முகமை வெற்றிகரமாக நடத்தியது. முகாம் செயல்பட்ட நான்கு மணி நேரத்திற்குல் 200 க்கும் மேற்பட்டோர், பல முதியவர்கள் மற்றும் மகளிர்  முகாமில் கலந்து கொண்டதால், இந்த முகாம் மகத்தான வரவேற்பை பெற்றது. பங்கேற்பாளர்களுக்கு, முழுமையான ஒரு பரிசோதனைக்குப் பிறகு, அவர்களின் உடல்நிலை குறித்து …

Read More »

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன்.  சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு …

Read More »

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் …

Read More »

கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து – தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் கேதார்நாத்துக்கு இயக்கிய பெல் 407 ஹெலிகாப்டர் (பதிவு விடி-பிகேஏ) இன்று (15.06.2025) ஒரு துயர விபத்தில் சிக்கியது. அதில் ஐந்து பயணிகள், ஒரு குழந்தை, ஒரு பணியாளர் ஆகியோர் பயணித்தனர். ஹெலிகாப்டர் குப்த்காஷியில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீ கேதார்நாத் ஜி ஹெலிபேடில் காலை 05:18 மணிக்கு தரையிறங்கியது. அது மீண்டும் காலை 05:19 மணிக்கு குப்த்காஷிக்கு புறப்பட்டது. ஆனால் அந்த ஹெலிகாப்டர் …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது – திரு அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (15.06.2025) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,  உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் …

Read More »

இந்தியா இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக மாறும் -மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்

உலகளாவிய இணக்கத் தீர்வுக்கான நடுவர்மன்ற மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், சட்ட அமைச்சகமானது ஓஎன்ஜிசி, இந்திய சர்வதேச நடுவர் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, நேற்று (ஜூன் 14, 2025) புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நிறுவன நடுவர் மன்றம் குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாட்டில் சட்டம், நீதித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், …

Read More »