Saturday, March 28 2026 | 12:24:02 PM
Breaking News

மகா கும்பமேளாவில் ஆயுஷ் சேவைகள் பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா 2025 ஜனவரி 13 முதல் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள நிலையில், ஆயுஷ் இணை அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். முன் முயற்சிகள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்திய அமைச்சர், இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் அனுபவத்தை வளப்படுத்துவதில் குழுவினரின் உறுதிப்பாட்டை பாராட்டினார். …

Read More »

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற வகையில் தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது: மக்களவைத் தலைவர்

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற வகையில் தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதை எடுத்துரைத்த அவர், இத்தகைய பங்கேற்பு நமது தேர்தல் நடைமுறையில் அனைவரையும் உள்ளடக்கியதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார். லண்டனில் இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாய்லுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது திரு பிர்லா, இந்தக் …

Read More »

தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் விஷோநெக்ஸ்ட் முன்முயற்சி – இந்தியாவில் ஆடை வடிவமைப்பு வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது

விஷோநெக்ஸ்ட் (VisioNxt)  என்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் முன்முயற்சி இந்தியாவில் ஆடை வடிவமைப்பு சில்லறை வர்த்தக சந்தையை ஊக்குவிக்கிறது. இது பல்வேறு பாடத்திட்டங்கள், பயிற்சி பட்டறைகள், நவீன கால ஆடை வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), உணர்ச்சிசார் நுண்ணறிவு (Emotional Intelligence) ஆகியவற்றை இணைப்பதன்  மூலம் விஷோநெக்ஸ்ட் ஒரு உள்நாட்டு ஆடை வடிவமைப்பு சந்தை பற்றிய முன்கணிப்பு முறையை உருவாக்கி உள்ளது. இது இந்திய …

Read More »

குடியரசுத்தின விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு

இந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவரின் அலுவலகம் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 250 புகழ் பெற்ற விருந்தினர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அழைப்பிதழ் இந்திய அஞ்சல் துறையின்  சார்பில் விரைவு தபால் மூலம் பட்டுவாடா செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அஞ்சல் மண்டலம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த …

Read More »

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள்,  அரசுத் திட்டத்தின்  பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும்  நோக்கமாகக் …

Read More »

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (i), 2024-ன் இறுதி முடிவுகள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில்  வெளியிடப்பட்டுள்ளன. (i) ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை, 121-வது குறுகிய கால சேவைகளுக்கான பயிற்சி வகுப்பு (ஆண்கள்) …

Read More »

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

இந்தியாவில் பழங்குடியினரின் (எஸ்டி) எண்ணிக்கை 10.42 மில்லியன் ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக உள்ளது. 705 க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியினக் குழுக்களாக நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களுக்கு ஆதரவளிக்க சமூக பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி, அவர்களின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், கல்வியை மேம்படுத்துதல், பழங்குடி மக்களுக்கு …

Read More »

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், சந்தைப்படுத்துதல், இறக்குமதி, ஏற்றுமதி ஆகிய  நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. நமது பொருளாதாரத்திற்கு எண்ணெயும் எரிவாயுவும் முக்கியமான இறக்குமதி பொருட்களாக இருப்பதால், எரிசக்தி அணுகல், எரிசக்தி திறன், எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றுக்காக  அமைச்சகத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் அமைச்சகம் மேற்கொண்ட முன்முயற்சிகள், திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றில் முக்கியமான சில  பின்வருமாறு: •    பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன •    …

Read More »

பாஷினி மென்பொருளுடன் கூடிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இணையதளம் தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில் செயல்படுகிறது

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இணையதளத்தில் பன்மொழி செயல்பாட்டை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. இதில் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் காணலாம். முக்கிய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் …

Read More »

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் சிபிஐ உருவாக்கிய பாரத்போல் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07.01.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது, விருது பெற்ற 35 சிபிஐ அதிகாரிகளுக்கு காவல்துறை பதக்கங்களையும் திரு அமித் ஷா வழங்கினார், அவர்களுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம், புலனாய்வில் சிறந்து விளங்கியதற்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மத்திய …

Read More »