सोमवार, दिसंबर 23 2024 | 08:24:19 AM
Breaking News
Home / अन्य समाचार / ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக அசோக் கே.கே.மீனா பொறுப்பேற்றார்

ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக அசோக் கே.கே.மீனா பொறுப்பேற்றார்

Follow us on:

திரு அசோக் குமார் கலுராம் மீனா, 31.10.2024 அன்று புதுதில்லியின் சி.ஜி.ஓ வளாகத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியலில்  பி.டெக் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  பொருளாதாரத்தில் முதுகலை  பட்டம்  பெற்றுள்ளார்.

டியூக் பல்கலைக்கழகத்தின் சான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியில் பொது நிதியில் சர்வதேச மேம்பாட்டுக் கொள்கையில் (எம்.ஐ.டி.பி) முதுகலைப் பட்டம் பெற்றார்.

டி.டி.டபிள்யூ.எஸ்ஸில் சிறப்பு பணி அதிகாரியாக 2 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய திரு. மீனா, ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக தமது புதிய பணியைத் தொடங்குகிறார்.இதற்கு முன், அவர் 29 ஆகஸ்ட் 2022 முதல் 16 ஆகஸ்ட் 2024 வரை இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். மேலும் பல்வேறு துறைகளின் பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

திரு. மீனா ஒடிசா மாநிலத்தில் நிதி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …