रविवार, मार्च 30 2025 | 11:33:25 PM
Breaking News
Home / अन्य समाचार / இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 ஹரியானாவின் அம்பாலாவில் தொடங்கியது

இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 ஹரியானாவின் அம்பாலாவில் தொடங்கியது

Follow us on:

வியட்நாம்-இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 5 வது பதிப்பான “வின்பாக்ஸ் 2024” இன்று அம்பாலாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை  2024 நவம்பர் 04 முதல் 23 வரை அம்பாலா மற்றும் சண்டிமந்திரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 2023-ம் ஆண்டு வியட்நாமில் நடத்தப்பட்ட இருதரப்பு பயிற்சியின் தொடர்ச்சியாகும்.  இந்தியா- வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவ, விமானப்படை வீரர்கள் முதல் முறையாகப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இந்தப் பதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருதரப்புப் பங்கேற்பையும் அளிக்கிறது. 47 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் பிரிவில், பொறியாளர் படைப்பிரிவும், பிற ஆயுதங்கள் மற்றும் ராணுவ சேவைகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதேபோன்ற பலம் வாய்ந்த வியட்நாமிய படைப்பிரிவை வியட்நாம் மக்கள் ராணுவம் பிரதிநிதித்துவம் செய்கிறது.

வேலைவாய்ப்பில் இரு தரப்பினரின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஐ. நா. படைப்பிரிவின் ஒரு பகுதியாக பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கு பொறியாளர் நிறுவனம் மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதும் வின்பாக்ஸ் -2024-ன் நோக்கமாகும்.

முந்தைய இருதரப்பு பயிற்சிகளிலிருந்து மேம்பட்ட நோக்கங்களுடன், களப் பயிற்சியாக வின்பாக்ஸ் -2024-ஐ நடத்துவது, பரஸ்பர நம்பிக்கை, செயல்பாட்டை வலுப்படுத்தி, இந்திய ராணுவம், வியட்நாம் மக்கள் ராணுவம் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும். மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண விளக்கம் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியுடன் 48 மணிநேர சரிபார்ப்பு பயிற்சியும் இடம்பெறும். இந்தக் கூட்டுப் பயிற்சி இரு படைப்பிரிவுகளிலும் உள்ள வீரர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

सोनू त्यागी ने डिजिटल प्लेटफॉर्म्स पर बढ़ती अश्लीलता की निंदा की, नैतिक और आध्यात्मिक मूल्यों को बढ़ावा देने की अपील

मुंबई – प्रसिद्ध फिल्म निर्माता, आध्यात्मिक विचारक और अप्रोच एंटरटेनमेंट एवं गो स्पिरिचुअल के संस्थापक …

News Hub