शुक्रवार, नवंबर 22 2024 | 06:53:30 AM
Breaking News
Home / Choose Language / Tamil / சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண்களுடன் மத்திய அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு கலந்துரையாடினார்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண்களுடன் மத்திய அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு கலந்துரையாடினார்

Follow us on:

குடியரசுத் தலைவர் செயலகத்தின் முன்முயற்சியான “மக்களுடன் குடியரசுத் தலைவர்” என்ற திட்டத்தின் கீழ், விமானிகள், விமானச் சிப்பந்திகள், விமானங்களை இயக்குவதற்கான  சமிக்ஞை அனுப்புபவர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், பராமரிப்பு பொறியாளர்கள், விமான நிலைய மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்துரையாடினார்.

இந்த பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மதிய விருந்து அளித்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, பெண் சாதனையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் தங்களது வெற்றிக் கதைகளை அமைச்சருடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் மன உறுதியைப் பாராட்டிய அமைச்சர், விமானப் போக்குவரத்துத் துறையில் சேர இளம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் சிறிய மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு தங்கள் செய்தியை எடுத்துச் செல்லுமாறு சாதனையாளர்களை அவர் ஊக்குவித்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …