शुक्रवार, नवंबर 15 2024 | 09:04:27 AM
Breaking News
Home / Choose Language / Tamil / தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

Follow us on:

குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர், மேலாண்மை நிறுவனத்தின் (NIFTEM-K) ஐந்தாவது பட்டமளிப்பு விழா இன்று (2024 நவம்பர்  11) நடைபெற்றது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு மின்ஹாஜ் ஆலம், ஹல்திராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு பங்கஜ் அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நிஃப்டம்-கே எனப்படும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர், மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் பேராசிரியர் வி.ராம்கோபால் ராவ் விழாவைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் டாக்டர் எச்.எஸ்.ஓபராய் வரவேற்புரை நிகழ்த்தினார். மொத்தம் 764 மாணவர்களுக்கு பல்வேறு பாடத்திட்டங்களில் பட்டங்கள் வழங்கப்பட்டன. திருமதி அனிதா பிரவீன் சிறந்த சாதனையாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
நிகழ்வின் முடிவில், பேராசிரியர் ராவ், உணவு தொழில்நுட்பத்தில் எதிர்கால தலைவர்களை வளர்ப்பதற்கான இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவின் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின்  செயலாளர் திருமதி அல்கா …