மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 – ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2023-24 – ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான 4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன. CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும். சீர்திருத்தம் குறித்த ஆலோசனைகளுக்குப் பின்னர் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்தில் பல முன்னோடி முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் வாரியம் எடுத்த முக்கிய முடிவுகள் வருமாறு: உறுப்பினர்களின் நலனுக்கான முடிவுகள்: • தொழிலாளர் சேமநல நிதிச் சட்டம் 1952 – ன் பிரிவு 60 (2) (பி) – ன் குறிப்பிடத்தக்க திருத்தத்திற்கு மத்திய அறங்காவலர் வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போதுள்ள விதிகளின்படி, மாதத்தின் 24- ம் தேதி வரை தீர்க்கப்பட்ட உரிமைகோரலுக்கு, முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்படும். இனி செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினருக்கு வட்டி வழங்கப்படும். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிதிப் பயன் கிடைப்பதுடன், குறைகளும் குறையும். தற்போது வரை, உறுப்பினர்களுக்கு வட்டி இழப்பைத் தவிர்ப்பதற்காக மாதந்தோறும் 25 ஆம் தேதி முதல் இறுதி வரை வட்டி தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. இந்த முடிவுக்குப் பிறகு, இந்த கோரிக்கைகள் முழு மாதத்திற்கும் செயலாக்கப்படும், இது நிலுவையில் உள்ள உரிமை கோரல் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். சரியான நேரத்தில் தீர்வு, வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கும். திறமையான, வெளிப்படையான மற்றும் உறுப்பினரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலுக்கான தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
Read More »உலக எய்ட்ஸ் தினம் 2024
1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. தற்போதைய சவால்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அரசுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது. ஹெச்.ஐ.வி ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதைப் பற்றிய புரிதலை வளர்ப்பதன் மூலம், உலக எய்ட்ஸ் தினம், அந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை அடைவதற்கும் இடையிலான ஒருங்கிணைந்த தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024 கருப்பொருள்: “உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” 2024 க்கான கருப்பொருள், “உரிமைப் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” என்பதாகும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் அத்தியாவசிய ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் முறையான சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொருவரும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியத்திற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதில் மனித உரிமைகளின் பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. இந்த உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 பிரச்சாரம், உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், களங்கத்தைக் குறைப்பதற்கும், பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸை ஒழிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸின் தற்போதைய நிலை ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியிட்ட உலகளாவிய எய்ட்ஸ் புதுப்பிப்பு 2023 இன் படி, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன, அங்கு ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு மற்றும் அதிகரித்த நிதி முதலீடுகள், எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதை 2030 க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்தியதற்காக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது நீடித்த தலையீடுகளின் வெற்றியை நிரூபிக்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போர் 1985-ஆம் ஆண்டில் பல்வேறு மக்கள்தொகை குழுக்கள் மற்றும் புவியியல் இடங்களில் தொற்றைக் கண்டறியும் பணி செரோ-கண்காணிப்புடன் தொடங்கியது. ஆரம்ப கட்டம் (1985-1991) ஹெச்.ஐ.வி நோயாளிகளை அடையாளம் காணுதல், ரத்தமாற்றங்களுக்கு முன் ரத்த பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இலக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. 1992-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பு வேகம் பெற்றது. இது நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸைக் கையாள்வதற்கான முறையான மற்றும் விரிவான அணுகுமுறையின் தொடக்கத்தைக் குறித்தது. முடிவு உலக எய்ட்ஸ் தினம் 2024 ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை அகற்ற இன்னும் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்டுகிறது. தடுப்பு, சிகிச்சை மற்றும் கவனிப்பு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், முறையான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக களங்கம் போன்ற சவால்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி உலகம் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் முயற்சிகள் கூட்டு நடவடிக்கை, புதுமையான உத்திகள் மற்றும் சுகாதார சமத்துவத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
Read More »உலக எய்ட்ஸ் தினம் -இந்தூரில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகிக்கிறார்
உலக எய்ட்ஸ் தினம் 2024-ஐ முன்னிட்டு, 2024 டிசம்பர் 01 அன்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்நூலில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு வகையில் ஹெச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் மீதான ஐநா திட்டத்தின் கருப்பொருளான ‘உரிமைகளை எடுத்துக்கொள்’ என்ற கருப்பொருளுடன் இந்த உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது, அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைபிடித்து வருகிறது. சமூகம், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி / எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत …
Read More »பீகார் மாநிலம் மதுபானியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
பீகார் மதுபானியில், அம்மாநிலத் துணை முதலமைச்சர் திரு. சாம்ராட் சவுத்ரி முன்னிலையில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஸ்ரீ ராம்பிரீத் மண்டல்; திரு சஞ்சய் குமார் ஜா; டாக்டர் அசோக் குமார் யாதவ்; மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திரு வினோத் நாராயண் ஜா; ஸ்ரீ சுதான்ஷு சேகர்; மற்றும் ஸ்ரீ கன்ஷ்யாம் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிச் சேவைகள் துறை (DFS) செயலாளர் திரு. எம். நாகராஜு, நபார்டு வங்கித் தலைவர் திரு கே வி ஷைஜி; சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் திரு எம்.வி.ராவ்,; இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு மனோஜ் மிட்டல்; நிதிச் சேவைகள் துறைத் தலைவர் கூடுதல் செயலாளர் திரு எம்.பி.டாங்கிராலா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் திரு சுரிந்தர் ராணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுபானி நகருக்கு வருகை தந்ததற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரு சாம்ராட் சௌத்ரி, குறிப்பாக அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய நிதியமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடனுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. பல்வேறு ஊரக சாலை திட்டங்களுக்கு நபார்டு மற்றும் சிட்பி வாயிலாக முறையே 155.84 கோடி ரூபாய் மற்றும் 75.52 லட்சம் ரூபாய் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டன. பின்னர், வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியால் கடனுதவி அளிக்கப்பட்ட தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 25 அரங்குகளை திருமதி சீதாராமன் பார்வையிட்டார். மைதிலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தலா ஐந்து அரசியல் சாசன பிரதிகளை மத்திய நிதியமைச்சர் வழங்கினார். பள்ளிகளில், குறிப்பாக மகளிர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளன. ஆம்புலன்ஸை வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Read More »இந்திய இராணுவம் – சிங்கப்பூர் ஆயுதப் படை இடையேயான “அக்னி வாரியர் – 2024” கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு
இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியான அக்னி வாரியர் (XAW-2024) – ன் 13-வது பதிப்பு, மஹாராஷ்ட்ரா மாநிலம் தேவ்லாலியில் உள்ள ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்ச்ஸில் நடைபெற்ற 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்று நிறைவடைந்தது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதிமுதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த 182 வீரர்கள், பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர். ஐ.நா. அவையின் சாசனத்தின் கீழ் உலகளவில் பல்வேறு நாடுகளிடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பரஸ்பர புரிதலை அதிகரிப்பதே XAW-2024 – ன் நோக்கமாகும். இந்த பயிற்சியில் இரு நாட்டு இராணுவம், மற்றும் பீரங்கிப் படைகளின் கூட்டுத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை உபகரணங்களின் பயன்பாடு ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பீரங்கிப் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அடோஷ் குமார், பீரங்கிப் பயிற்சிப் பள்ளியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.சர்னா, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தலைமை பீரங்கிப் படை அதிகாரி கர்னல் ஓங் சியோ பெர்ங் ஆகியோர் கலந்து கொண்டனர். உயர் தொழில்முறை சார்ந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக பயிற்சியில் பங்கேற்ற துருப்புக்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். .இவ்விரு படைகளின் விரிவான தயார்நிலை, ஒருங்கிணைப்பு, இருநாட்டு வீரர்களின் திறன்கள், நடைமுறைகள், இந்திய – சிங்கப்பூர் பீரங்கிப் படைப் பிரிரிவுகளுக்கு இடையிலான பொதுவான பரிணாம ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த பயிற்சியில் அடங்கும். சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் பெற்ற வெற்றிகரமான பயிற்சியின் உச்சக்கட்டமாக இது அமைந்தது. இரு நாட்டு கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருதரப்பினரும் பயிற்சியின் போது முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதுடன் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
Read More »இலையுதிர் காலம் 2024 – பயிற்சி முடித்த கடற்படை வீரர்களின் அணிவகுப்பு
எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தில் (ஐ.என்.ஏ) சனிக்கிழமை அன்று நடைபெற்ற பயிற்சி முடித்த கடற்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பில், இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தின் 107-வது தொகுப்பில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மொத்தம் 239 வீரர்கள், சிறப்புக் கொடியுடன் பட்டம் பெற்றது, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களில் நான்கு நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 29 பெண் வீரர்களும் அடங்குவர். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்த அணிவகுப்பை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பயிற்சியின் பொது தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார். தலைமை விருந்தினருடன் கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் (NWWA) தலைவர் திருமதி சஷி திரிபாதியும் கலந்து கொண்டார். தெற்கு கடற்படை தலைமை கொடி அதிகாரி தலைமைத் தளபதி வி.ஏ.டி.எம் வி.ஸ்ரீனிவாஸ் பயிற்சிக்கான அதிகாரியாக பணியாற்றினார். இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தின் கமாண்டன்ட் சி.ஆர்.பிரவீன் நாயர் மற்றும் என்.டபிள்யூ.டபிள்யூ.ஏ எழிமலா தலைவர் திருமதி தீபா பட் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன:- (a) இந்திய கடற்படை அகாடமி B.Tech பாடநெறிக்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் கப்பல் பணியாளர் ஆயுஷ் குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டது. (b) இதே பாடத்திட்டத்திற்கான CNS வெள்ளிப் பதக்கம் மற்றும் FOC-in-C தெற்கு வெண்கலப் பதக்கம் முறையே மிட்ஷிப்மேன் கரண் சிங் மற்றும் மிட்ஷிப்மேன் கார்த்திகே வி வெர்னேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. (c) கடற்படை நோக்குநிலை பாடநெறிக்கான (நீட்டிக்கப்பட்ட) சிஎன்எஸ் தங்கப் பதக்கத்தை ஸ்ரீலண்ட் ரித்விக் மிஸ்ரா பெற்றார், அதே நேரத்தில் கேடட் ஸ்ராஜன் ஜெயின் மற்றும் எஸ்எல்டி போடேகர் எஸ் சுபாஷ் ஆகியோர் முறையே எஃப்ஓசி-இன்-சி சவுத் வெள்ளிப் பதக்கம் மற்றும் கமாண்டன்ட் ஐஎன்ஏ வெண்கலப் பதக்கம் பெற்றனர். (d) எஸ்.எல்.டி ஈஷா 39 என்.ஓ.சி படைப்பிரிவிற்கான சி.என்.எஸ் தங்கப் பதக்கத்தையும், கமாண்டன்ட் ஐ.என்.ஏ வெள்ளிப் பதக்கத்தையும், சிறந்த அனைத்து சுற்று பெண் வீரர்களுக்கான ஜமோரின் கோப்பையையும் முறையே எஸ்.எல்.டி மதி நேசிகா டி மற்றும் எஸ்.எல்.டி ஈஷா ஷா ஆகியோர் பெற்றனர். (e) கடலோர காவல்படை தலைமை இயக்குனர் சிறந்த உதவி கமாண்டன்ட் விருது உதவி கமாண்டன்ட் ஆகாஷ் திவாரிக்கு வழங்கப்பட்டது. வெற்றிகரமான பயிற்சியை முடித்த வீரர்கள் பளபளக்கும் சடங்கு வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கண்கவர் முறையில் அணிவகுத்துச் சென்றனர்,. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளில் ஒரு பாரம்பரியமான இந்த நெகிழ்ச்சியான பிரியாவிடை, இந்திய கடற்படை அகாடமியில் அவர்களது பயிற்சியின் இறுதிக் கட்டத்தை குறிப்பதாக உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படைத் தளபதி இராணுவத் தலைவர்களின் உண்மையான வலிமை “ஒவ்வொரு செயல்பாடு மற்றும் பணியிலும் வெற்றியை அடைய தங்கள் அணிகளை ஊக்குவிக்கும் திறன், தீர்க்கமாக செயல்படுதல் மற்றும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க” அவர்களின் திறனில் உள்ளது என்று வலியுறுத்தினார்.
Read More »ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்காக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
2024 – ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி அன்று கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் INS விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்கான (SRDD) ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 2013- ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஒரு இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். மறுபொருத்தம் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிந்ததும், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் மேம்படுத்தப்பட்ட போர் திறனுடன் இந்திய கடற்படையில் சேரும். கப்பல் பராமரிப்பு, பழுது பார்த்தல், மாற்றியமைத்தல் (MRO) போன்ற பணிகளை மேற்கொள்ளும் மையமாக செயல்படும் இந்த கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் ஒரு முக்கியமான படியாகும். இந்தத் திட்டம் சுமார் 50 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பணிகளில் ஈடுபடுத்துவதுடன், 3500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் திட்டம் பெரும் உத்வேகத்தை அளிக்கும். भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक …
Read More »6 நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் கையெழுத்திட்டது
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), புதுதில்லியில் உள்ள தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA-என்எஃப்ஆர.ஏ) தலைமையகத்தில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு என்எஃப்ஆர்ஏ தலைவரும், ஐஐசிஏ-வின் டி.ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் பூஷண் பாண்டே தலைமை வகித்தார் . கோர்ன் ஃபெர்ரி, ஏபிசி கன்சல்டன்ட்ஸ், ஈஎம்ஏ பார்ட்னர்ஸ் லிமிடெட், டிஹெச்ஆர் குளோபல், ஷெஃபீல்ட் ஹாவொர்த், வஹுரா ஆகிய ஆறு முன்னணி நிர்வாக தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒத்துழைப்பு இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களுக்கான தேர்வையும் நியமன செயல்முறைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களில் கார்ப்பரேட் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது குறித்து டாக்டர் அஜய் பூஷண் பாண்டே கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு, நவீன வாரிய செயல்முறைகளில் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்து, திறமையான நிபுணர்களுக்கான தேவைகளை உறுதி செய்யும் என்றார். இந்த முன்முயற்சிகள், வாரியத் தலைமை, தேர்வு நடைமுறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள், இந்திய இயக்குநர் குழுவை உலகத் தரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கார்ப்பரேட் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது. भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से …
Read More »இளைஞர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்களாக உள்ளனர்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் தோய்முகில் உள்ள ரோனோ ஹில்ஸில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மக்களின் விருப்பங்களும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று கூறினார். விவாதம், உரையாடல், பேச்சு ஆலோசனைகளிலிருந்து விலகி, இடையூறை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் கடுமையாக விமர்சித்தார். நாட்டின் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை கண்காணித்து வருவதாகவும், ஜனநாயகத்தின் காவலர்களாக செயல்படுவதாகவும், திரு ஜக்தீப் தன்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். பாரபட்சம், ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவை இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் வரலாறு காணாத உயர்வை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், கடல், நிலம், வானம், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். இந்தியா ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உள்ளது என்றும், மூன்றாவது பெரிய நாடாக மாறுவதற்கான பாதையில் தற்போது உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார். भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश कनौजिया की पुस्तकें ऑडियो बुक : भारत 1885 से …
Read More »केंद्रीय बंदर वाहतूक आणि जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल आणि इटलीचे उद्योगमंत्री अडोल्फो उर्सो यांची भेट, मजबूत सागरी सहकार्याची घेतली शपथ
केंद्रीय बंदरे, जहाजबांधणी आणि जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल यांनी आज मुंबई येथे उभय देशांमधील सागरी सहकार्य अधिक दृढ करण्याच्या दृष्टिकोनातून इटली सरकारचे उद्योगमंत्री अडोल्फो उर्सो यांची भेट घेतली. मुंबई बंदरातील इंदिरा डॉक येथे इटालियन नेव्ही स्कूल शिप, AMERIGO VESPUCCI जहाजाच्या येथे ही बैठक पार पडली. त्यानंतर सोनोवाल आणि उर्सो यांनी …
Read More »
Matribhumisamachar
