பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் …
Read More »சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன். சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு …
Read More »ஏஐ 171 விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு செய்தியாளர் சந்திப்பு – விரிவான பல்நோக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இன்று புதுதில்லியில் உள்ள உதான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 171-ன் துயர விபத்து குறித்தும், அரசின் உடனடி நடவடிக்கைகள், நடந்து வரும் விசாரணைகளின் நிலை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு விளக்கினார். உயிர் இழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. இதில் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு பேசியது: “ஜூன் 12, 2025 அன்று, அகமதாபாத் – லண்டன் இடையே இயக்கப்படும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் ஏஐ 171, புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தின் மக்கள் தொகை மிகுந்த மேகனி நகர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். இறந்தவர்களில் பயணிகள், இளம் மருத்துவ மாணவர்கள் அடங்குவர். உடனடியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு காயமடைந்தவர்களுடன் கலந்துரையாடினார். மீட்பு, நிவாரண முயற்சிகளை ஆய்வு செய்தார். விமான நிலையத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். சம்பவம் நடந்த உடனேயே உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சம்பவ இடத்திற்கு சென்று, கள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு மத்திய அமைப்புகள், நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். சம்பவம் நடந்த உடனேயே சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், அவசர சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களையும் சந்தித்தனர். விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB- ஏஏஐபி), அதே நாளில் விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியது. ஏஏஐபி-யின் தலைமை இயக்குநர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உடனடியாக அனுப்பப்பட்டது. ஜூன் 13 அன்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. டிகோடிங் செயல்முறை விமானத்தின் இறுதி தருணங்கள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்பரிமாண மறுஆய்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணையை நடத்துவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பின்வருவனவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர்: * சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் * உள்துறை அமைச்சகம் * குஜராத் அரசு * டிஜிசிஏ, பிசிஏஎஸ், இந்திய விமானப்படை, புலனாய்வுப் பணியகம் * மாநில பேரிடர் மீட்பு ஆணையம் * தேசிய, மாநில அளவிலான தடயவியல் நிபுணர்கள் இந்தக் குழு ஜூன் 16 திங்கள்கிழமை தனது பணகளைத் தொடங்க உள்ளது. சரிபார்க்கப்படாத தகவல்களைத் தவிர்க்குமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. விசாரணைகள் முன்னேறும்போது அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் பகிரப்படும். உண்மையை வெளிக்கொணர்வதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.”
Read More »கொச்சியில் தீ விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பலில் தீயைக் கட்டுபடுத்த கடலோரக் காவல்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை, அதிக ஆபத்துகளுக்கு இடையில் தீவிர நடவடிக்கை
சிங்கப்பூர் கப்பல் எம்.வி. வான் ஹாய் 503-ல் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக, இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி), இந்திய கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இவை இணைந்து, நேற்று (ஜூன் 13, 2025) கடலில் தீ விபத்தில் சிக்கிய கொள்கலன் கப்பலை வெற்றிகரமாக இழுத்துச் சென்றன. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், பலத்த மேற்கு காற்று ஆகியவை காரணமாக அந்தக் கப்பல் கரையை நோக்கி ஆபத்தான முறையில் நகர்ந்தது. இந்த நிலையில், ஜூன் 13 அன்று கொச்சியில் இருந்து சென்ற கடற்படை ஹெலிகாப்டர், மிகவும் சவாலான சூழ்நிலையில் மீட்புக் குழு உறுப்பினர்களை கப்பலில் வெற்றிகரமாக இணைத்தது. பின்னர் அந்தக் குழு கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் 600 மீட்டர் இழுவைக் கயிற்றை இணைத்தது. இந்தக் கப்பல் இப்போது 1.8 கடல் மைல் வேகத்தில் மேற்கு நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் 35 கடல் மைல்கள் தொலைவு உள்ளது. கடலோர காவல் படையின் 3 ரோந்துக் கப்பல்கள், அந்த தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது, அடர்ந்த புகை மட்டுமே கப்பலில் உள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி, அதன் விதி உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படும் வரை, கப்பல் இந்திய கடற்கரையிலிருந்து குறைந்தது 50 கடல் மைல்கள் தொலைவில் இருப்பதை உறுதிசெய்ய கடலோர காவல் படை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கூடுதல் தீயணைப்பு இழுவைக் கப்பல்கள் வருவதால் நிலைமை மேலும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார் செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர். அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியனின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …
Read More »பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை
மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, அன்பான நண்பர்களே, வணக்கம். பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘கடலோரப் பகுதிகளுக்கு தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குதல்’. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி சந்தித்தார்
இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். …
Read More »பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானியுடன் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான சந்திப்பை நடத்தினார்
இத்தாலியின் தொழில் உற்பத்தி மையமான பிரெசியாவில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உயர்நிலை சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். 2025 ஜூன் 5 அன்று நிறைவடைந்த இத்தாலி பயணத்தின் போது பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா – இத்தாலி கூட்டு ஆணையத்தின் 22-வது அமர்வுக்கு இருதலைவர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். ஆக்கப்பூர்வமான …
Read More »வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …
Read More »
Matribhumi Samachar Tamil