இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …
Read More »புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்
புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …
Read More »இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது
தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயிற்சி 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை ஜப்பானின் கிழக்கு புஜி பகுதியில் நடைபெறவுள்ளது. தர்மா கார்டியன் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முந்தைய பதிப்பு ராஜஸ்தானில் 2024 …
Read More »13-வது மலேசியா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் கோலாலம்பூரில் நடைபெற்றது
மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம் 2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அண்மையில் இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன. பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து …
Read More »இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது
இந்தியக் கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் (ஐசிஜிஎஸ்) வீரா ஆகியவை மூலம் இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து கம்போடியாவின் சிஹானுக்வில்லில் இருந்து 2025 பிப்ரவரி 17 அன்று புறப்பட்டது. மூன்று நாள் பயணத்தின் போது, இந்தியக் கடற்படை, ராயல் கம்போடிய கடற்படையுடன் இணைந்து நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் ஐசிஜிஎஸ் …
Read More »ஆயுஷ் மருத்துவமுறைகளின் தரவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் உலகளாவிய அறிக்கை
பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உலக சுகாதார அமைப்பு நோய்கள் குறித்த சர்வதேச வகைப்பாட்டிற்கு ஏற்ப அதன் புதுப்பிக்கும் நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின்படி பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான புதிய தொகுதியை அறிமுகப்படுத்துகிறது. இது ஆயுர்வேதம், சித்தா, யுனானி தொடர்பான பாரம்பரிய மருத்துவ முறைகளின் முறையான கண்காணிப்பு மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பில் ஒரு முக்கிய நிலையைக் குறிக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கான நெறிமுறைகள் …
Read More »இந்திய – ஐக்கிய அரபு அமீரிம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி 3 ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்திய-ஐக்கிய அரபு அமீரகம் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ) கையொப்பமிடப்பட்டு 2025 பிப்ரவரி 18 ஆம் தேதி மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. சி.இ.பி.ஏ என்பது ஒரு முழுமையான மற்றும் ஆழமான ஒப்பந்தமாகும், இது 18 பிப்ரவரி 2022 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்இடையே ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. …
Read More »இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக், தமது மனைவி திருமதி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் கிருஷ்ணா, அனுஷ்காவுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார். அவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தியும் வருகை தந்திருந்தார். மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங், திரு சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். மாநிலங்களவை செயலாளர் திரு. பி.சி. மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த வருகையின் போது, …
Read More »இந்தியா – கத்தார் கூட்டறிக்கை
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரி 18 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் திரு …
Read More »ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி
இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக உயர்தர சங்கோலா, பாக்வா ஆகிய இந்திய மாதுளை ரகங்களை கடல்வழியாக முதல் முறையாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விளைபொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். ஆஸ்திரேலியாவிற்கு மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான …
Read More »
Matribhumi Samachar Tamil