बुधवार, नवंबर 13 2024 | 04:01:10 AM
Breaking News
Home / Choose Language / Tamil / மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வட்டமேஜை ஆலோசனைக்கு ஏற்பாடு

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வட்டமேஜை ஆலோசனைக்கு ஏற்பாடு

Follow us on:

பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் வடகிழக்கு மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற ஒருநாள் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி காரே வலியுறுத்தினார்.

அவர் தமது தொடக்க உரையில், தேசிய அளவில் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும் பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதில் வடகிழக்கு மாநிலங்களின் திறனை எடுத்துரைத்தார். இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்த உற்பத்தியுடன் மிதப்படுத்த முடியும், இது ஒட்டுமொத்த உணவு பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் வடகிழக்கு மாநிலங்களின் பங்கு முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

ரயில் ரேக் மூலம் 840 மெட்ரிக் டன் வெங்காயம் 2024நவம்பர் 5ஆம் தேதி குவஹாத்தியில் உள்ள சங்சாரி நிலையத்திற்கு வந்ததாக திருமதி கரே கூறினார். இந்த வெங்காயம் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் என்.சி.சி.எஃப் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது வடகிழக்கு மாநிலங்களில் வெங்காயம் பரவலாகக் கிடைப்பதை உறுதி செய்து, விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். நாசிக்கிலிருந்து தில்லி, சென்னை மற்றும் குவஹாத்தி போன்ற முக்கிய இடங்களுக்கு ரயில் ரேக் மூலம் வெங்காயத்தை மொத்தமாக கொண்டு செல்வது இந்த ஆண்டு முதல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகரித்த உணவுப் பொருள் இருப்பு மற்றும் உணவு விலை மேலாண்மைக்கான முழுமையான உத்தி மற்றும் செயலாக்க வரைபடத்தை உருவாக்க மாநிலங்களின் அனைத்து தொடர்புடைய துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பங்கேற்புடன் இந்த வகையான பயிலரங்கு ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் பருப்பு வகைகள் மற்றும் தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி மற்றும் உணவு விலை மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மத்திய அரசு பணி நியமனத்தில் நேர்மறையான முன்னேற்றம்

”நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே எங்கள் உறுதிப்பாடு. மத்திய அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நேரடித் தாக்கத்தை …