सोमवार, दिसंबर 23 2024 | 03:11:05 PM
Breaking News
Home / अन्य समाचार / ‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்

‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்

Follow us on:

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு: ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, உலக வங்கியின் இந்திய இயக்குநர் திரு அகஸ்டே டானோ குவாமே, உலக வங்கியின் முன்னணி கல்வி நிபுணர் திருமதி ஷப்னம் சின்ஹா, அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் சில பள்ளி முதல்வர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், ஆறு மாநிலங்கள் குறித்த விரிவான அறிக்கையை அளித்த உலக வங்கிக் குழுவை பாராட்டினார். உலக வங்கிக் குழு நாடு தழுவிய கட்டமைப்பை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். திறன் மேம்பாடு மற்றும் வேலைகள் குறித்த இத்தகைய ஆழமான கண்டறிதல்கள், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு முற்போக்கான கொள்கைகளை உருவாக்கவும் பங்குதாரர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறினார். வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு வரையறையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, பொருளாதார வாய்ப்புகள், அதிகாரமளித்தல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்தியாவை உலகளாவிய திறன் மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், நாட்டின் மக்கள் தொகையே உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இருக்கும்  என்றார். இதற்காக, பள்ளிகளில் திறன் பயிற்சி தொடங்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கை 2020 பள்ளிகளில் திறனை பிரதானப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது உரையில், கடந்த பட்ஜெட்டில், மையம் -ஆரக்கம்பி மாதிரியைப் பின்பற்றி, பிராந்திய திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பின் திறனைப் பயன்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க முன்மொழியப்பட்டது என்று குறிப்பிட்டார். கல்விக் கொள்கையில் முறைசாராக் கல்வியைச் சேர்ப்பது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்காக அவருக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா நன்றி  தெரிவித்தார்.

2047 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை உயர் வருமான நாடு என்ற நிலையை நோக்கி மாற்றுவதற்கான லட்சிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. இந்தியாவை  உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை அடைய, அதன் வேலைவாய்ப்பு  சவால்களை அவசரமாக எதிர்கொண்டு அதன் பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.

இந்த வகையில் இமாச்சலப் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கான கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துதல்  என்ற திட்டத்துடன் உலக வங்கி கல்வி அமைச்சகத்திற்கு உதவுகிறது. இதன் கீழ் முக்கிய சீர்திருத்தங்கள் பகிரப்பட்டு செயல்படுத்த பரப்பப்படுகின்றன. இந்த அறிக்கை 9-12 ஆம் வகுப்புகளிலிருந்து திறன் அடிப்படையிலான கல்வியை இணைப்பதன் மூலம குறிப்பிடத்தக்க நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …