இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இன்று மாலையும் நாளையும் அவருடன் நடைபெறும் உரையாடல்களை எதிர்நோக்கி இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையேயான நட்பு காலத்தால் மாறாத ஒன்று எனவும், இது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட பகவத் கீதை நூலின் பிரதியை ரஷ்ய அதிபர் …
Read More »இந்தியா-ரஷ்யா இடையேயான வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், கிருஷி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர் திருமதி ஒக்ஸானா லூட்டுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அங்கு இரு தரப்பினரும் தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததுடன், எதிர்கால ஒத்துழைப்பு வழிவகைகள் குறித்து ஆலோசித்தனர். இந்தியா-ரஷ்யா உறவுகள் நம்பிக்கை, நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர்கள் குறிப்பிட்டனர். தற்போது சுமார் 3.5 பில்லியன் …
Read More »அரியவகைக் கனிமங்கள், தூய்மையான எரிசக்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
அரியவகைக் கனிமங்கள், கனிம வளங்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, அணுசக்தி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலி அமைப்பு போன்ற துறைகளில், கனடா நாட்டுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார். புதுதில்லியில் உள்ள இந்திய – கனடா நாடுகளின் வர்த்தக சபையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், …
Read More »‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
‘அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்’ – முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் ‘மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் …
Read More »ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
பிரேசிலின் பெலெமில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 30-வது மாநாட்டின் (UNFCCC CoP30) நிறைவு அமர்வில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பல குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும், இந்த மாநாட்டின் பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியா வலுவான ஆதரவைத் தெரிவித்தது. வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வழங்குவது தொடர்பான நீண்டகால கடமைகளை இந்தியா வலியுறுத்தியது . நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரிவு …
Read More »இஸ்ரேலுடன் உத்திசார் ஒத்துழைப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னெடுத்துள்ளார்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது விவசாயம், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார். நவம்பர் 21 அன்று நடந்த கூட்டங்களின் போது, விவசாயத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக திரு பியூஷ் கோயல், இஸ்ரேலிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு. அவி டிச்சரை சந்தித்தார். இஸ்ரேலின் 25 ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம், அதன் மேம்பட்ட விதை மேம்பாட்டு உத்திகள் மற்றும் விவசாயத்திற்கான நீர் மறுபயன்பாட்டு தொழில்நுட்பங்களில் நாட்டின் உலகளாவிய தலைமைத்துவம் குறித்து அமைச்சர் டிச்சர், திரு கோயலுக்கு விளக்கினார். பின்னர் திரு கோயல், பெரெஸ் அமைதி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தைப் பார்வையிட்டார், அங்கு இஸ்ரேலின் முன்னோடி தொழில்நுட்ப சூழல் அமைப்பு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் அயர்ன் டோம் அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிவேக தீர்வுகள் பற்றிய விளக்கங்களுடன் அவருக்குக் விளக்கப்பட்டன. பெரெஸ் மையத்தை இஸ்ரேலின் படைப்பாற்றல், புதுமை மற்றும் சமூக தாக்கத்தின் பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊக்கமளிக்கும் நிறுவனம் என்று அவர் விவரித்தார். முன்னதாக, நவம்பர் 20 அன்று, திரு பியூஷ் கோயல் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் திரு. நிர் பர்கட் அவர்களை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகத்தின் தற்போதைய பாதையை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இஸ்ரேல் வணிக மன்றம் நடைபெற்றது, இதில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மன்றத்தில் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன, அவை தொழில்நுட்பம், புதுமை, …
Read More »தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன். ஆப்பிரிக்காவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பதால், ஒரு சிறப்புமிக்க உச்சிமாநாடாக இருக்கும். 2023-ம் ஆண்டில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் உறுப்பினராகியது. இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த ஆண்டு ஜி20-ன் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும். …
Read More »பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் நாடுகள் கையெழுத்து
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் …
Read More »வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேல் செல்கிறார்
இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கட்டின் அழைப்பின் பேரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நவம்பர் 20 முதல் 22 வரை அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அவரது இந்தப் பயணம் இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், முதலீடு போன்ற …
Read More »சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்
சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அளித்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். தேவையான உதவியையும் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்வதற்கு சவுதி …
Read More »
Matribhumi Samachar Tamil